Sunday, March 30, 2008
Saturday, March 29, 2008
படித்ததில் பிடித்தது - 3
என் இந்திய நட்பே
என்ன சொல்லி புரிய வைப்பேன்
என் மண்ணை..
வீட்டு விருந்தாளியாய்
வந்தவர்களிடம்-எம்
நாட்டு நிலமைகளை
கொட்டிவிட்ட என்னன்னை
ஏன் இவ்வளவு நாளாய்
சொல்லவில்லை உன் சோகத்தை
என கேட்கும் உங்களிடம்....
நீங்கள் பரிதாபப்படுவதற்காய்
நாங்கள் ஒன்றும்
ஈழத்தில் பிறக்கவில்லை
உச்சுக் கொட்டி செல்வீர்கள்..
அப்புறம்..
வெள்ளி திரையின் மசாலாக்குள்ளும்
மரத்தை சுத்தும் 'டூயட்'க்குள்ளும்
காதலை தேடும் உங்களிடம்
என் மண்ணின் காதலை
எப்படி சொல்லிடுவேன்....
ஒரு நாள் உங்களால்
'கரண்ட்' இல்லாமல்
இருக்கமுடியுமா இல்லை
தொலைக்காட்சி இல்லாமல்
வாழ முடியுமா..
எப்படி சொல்லிடுவேன்
ஒரு சமுதாயமே
கற்கால வாழ்க்கை வாழ்ந்ததை..
நாங்கள் உடுத்திருந்த உடையோடு
ஊர் ஊராய் அலைந்ததை..
உங்கள் 'ரிவி'த்திரையில்
சில எழுத்துக்கள்
வெறும் வார்த்தைகள் தோன்றும்
"மென் இதயங்கள் தவிர்த்துவிடுங்கள்
கொடூரமான காட்சிகள்" என
ஆனால் என் மண்ணிலோ
நித்தம் சிதறிய உடல்களோடு
ரத்தமணத்துடன் நாம்
வாழ்ந்ததை...
நீங்கள் பாருங்கள்
உங்கள் வேலைகளை..
கிரிக்கெட்டில் தொலைந்து
போகவேண்டும்...
உங்கள் ஆதரச நாயகனின்
கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம்
செய்ய வேண்டும் ..
உங்களுக்கு ஏது நேரம்
எங்களுக்காய்
நின்று நிதானித்து
திரும்பிப் பார்க்க...
நாங்கள்
நாங்களாகவே
பிறந்தோம்..
போராடுவோம்..
சாவோம் ஆனால்
மீண்டும்
புதிதாய் பிறப்போம்..
- நட்புடன் ஸ்நேகிதி.....
Thursday, March 27, 2008
Sunday, March 23, 2008
போட்டோ ஸ்கேப்
Saturday, March 22, 2008
Sunday, March 16, 2008
நினைத்தேன்... சொல்கிறேன்...
நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் ஊரில் ஒவ்வொரு கால மாற்றத்திற்க்கு(சில மாதங்களுக்கு) ஏற்றாற் போல சிறுவர்கள் விளையாட்டான கபடி ஆடுதல்,
பம்பரத்தை வைத்து வட்டக்குத்து, திண்டுக்கல் விளையாடுதல்,
சிகரெட் அட்டையயை மடக்கி வைத்து செதுக்கு கல் ஆடுதல்,
கோழிகுண்டை வைத்து பச்சா விளையாடுதல்,
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களை சிகரெட் அட்டையில் ஒட்ட வைத்து ஆடும் அனைவரும் லாட்டரியை பந்தயமாக வைத்து ஆடுதல்,
ரப்பர் பந்தை வைத்து நண்பர்களை இரு அணிகளாக பிரித்து, எங்களுக்கு நடுவில் 6 அடி தூரத்தில் 7 சிறு வட்டமான கட்டைகள் அல்லது 7 உடைந்த கற்களை ஒரு சிறு வட்டத்தி வைத்து அதை நோக்கி பந்தை தூக்கி எறிய வேண்டும். பந்தை எதிரணி எடுத்து எங்கள் மேல் எறிந்தால் நாங்கள் தோற்றோம். பந்து எறி வாங்குவதற்கு முன், எங்கள் அணி அந்த சிதறிய 7 கட்டைகளை/கற்களை சேகரித்து அந்த சிறு வட்டதில் வைத்தால் நாங்கள் வென்றோம்.
வீட்டிலேயே விளையாடுவதற்க்காக ஆடுபுலி ஆட்டம், பரமபதம், பேங்கர் - ஒவ்வொருவருக்கும் ஆட்ட ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை தரப்படும். தாயக்கட்டையை உருட்டி, அதில் விழுந்த எண்களுக்கு ஏற்றாற்ப்போல் ஒவ்வொருவரு நாட்டிற்க்கு செல்ல வேண்டும். உங்கள் கையிருப்பு பணத்தை வைத்து நாட்டை வாங்கிய பின், மற்றவர்கள் உங்கள் நாட்டிற்க்கு வந்தால், அவர்கள் உங்களுக்கு வரி கட்ட வேண்டும். ஆட்ட இறுதில் யாரிடம் அதிகத்தொகை இருக்கிறதோ அவர்களே வெற்றி பெற்றவர் ஆவார்.
நொண்டியாடுதல், கோ-கோ ஆட்டம் என விளையாடுவோம்.
நான் கடந்த வருடம் இந்திய பயணத்தின் போது இந்த சிறுவர்கள் விளையாட்டுக்கள் எல்லாம் மறந்து/மறைந்து போனதை உணர்ந்தேன்.
இப்போது எல்லாம் வருடத்தில் அனைத்து மாதங்களிலும் 80 சதவிகித சிறுவர்கள் நேரத்தை செலவிடுவது தொலைக்காட்சியில் அல்லது வீடியோ கேம்ஸில். மீதமுள்ள 20வது சதவிகித குழந்தைகளும் சிறுவர்களும் தொலைக்காட்சியிலோ அல்லது வீடியோ கேம்ஸிலோ மூழ்கி தொலைந்துப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.....
இங்குள்ள புகைப்படங்கள் என்னுடைய கடந்த வருட இந்திய பயணத்தின் போது அருப்புக்கோட்டையில் என்னுடைய தெருவில் எடுத்தது.
Thursday, March 13, 2008
அம்மா... அப்பா...
அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக 'அ' எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும், 10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தை வைத்துள்ளனர்.
அதே போன்று தான் 'அப்பா' என்ற சொல்லும் அமைத்துள்ளது. இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற சொல்லில் 'ம்' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வலிமையானவர் என்பதால் அதில் 'ப்' எனும் வல்லின எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ் மொழி என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ள மொழி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Sunday, March 09, 2008
நினைவலை - 2
எனக்கு கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்திருந்த என் சிறுவயது போட்டோ...
இந்த போட்டோவை தந்த என் தம்பி செந்திலுக்கு நன்றி.
சரி... இனி இந்த போட்டோவில் இருப்பவர்களை பற்றி...
பின் வரிசையில் உள்ளவர்கள்(இடமிருந்து வலம்)
என் சித்தப்பா மகள் மகேஷ் - கல்லுரியில் எம்.எஸ்.சி படிக்கிறாள்.
எங்கள் பெரிய பாட்டி - நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எங்களை விட்டு மரணத்தேவனின் அழைப்பை ஏற்றார்.
என் சித்தப்பா மகன் முருகன் - பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வேலைச்செய்தது கொண்டு இருக்கிறான்.
என் பெரியப்பா மகள் லதா - திருமணம் முடித்து 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
கீழே உட்கார்ந்து இருப்பவர்கள் (இடமிருந்து வலம்)
என் பெரியப்பா மகள் லதா - திருமணம் முடித்து 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
என் பெரியப்பா மகன் செந்தில் - சென்னையில் கணணி பொறியாளராக பணிப்புரிகிறான்.
கடைசியில் நான் - அர்கான்ஸாஸ் - லிட்டில் ராக்கில் கணணி பொறியாளராக பணிப்புரிகிறேன்.
இந்த புகைப்படத்தில் என் தங்கை சுகந்தி இல்லை. அவளுக்கும் திருமணம் முடித்து இப்போது 5 வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவனும் நான் சிறு வயதில் இருந்தது போலவே உருவத்திலும், குறும்பிலும்...
நினைவலை தொடரும்...
Saturday, March 08, 2008
'அப்போலோ தினங்கள்' - சுஜாதாவின் கடைசி எழுத்து...
அதற்கு முன் நான் அவரைப் பார்த்தது, பிப் 21ம் தேதி. உடம்பு மெலிந்து, ஆக்ஸிஜன் மிஷினின் உதவியால் சுவாசம். கடந்த பதினைந்து வருடங்களில் நான் அவரை எவ்வளவோ முறை சந்தித்திருக்கிறேன்; இதுமாதிரி பார்ப்பது முதல் முறை. அத்தனை கஷ்டத்திலும், 'என்ன தேசிகன், ஆம்டையா நல்லா இருக்காளா? ஆண்டாள் எப்படி இருக்கா? ஸ்கூல் எல்லாம் ஒழுங்காப் போறாளா?' என்று எதையும் விடாமல் விசாரித்தார்.
'எல்லாரும் நல்லா இருக்காங்க சார்!'
'கிரிக்கெட் என்னப்பா ஆச்சு, வழக்கம் போலதானா?' என்றார்.
சில மணி நேரத்துக்கு முன்பு எடுத்த ரத்தப் பரிசோதனை அளவில் கிரியாடினின் அளவு அதிகமாக இருப்பதாகத் தகவல் வந்ததால், டாக்டர் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லியிருந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
'இந்தத் தடவை உடம்பு ரொம்ப படுத்திடுத்து. ஆஸ்பிட்டல் போனா இன்னும் படுத்துவாங்களே' என்றார்.
'ஒண்ணும் ஆகாது சார்! ஒரு டயாலிஸிஸ் பண்ணிட்டு அனுப்பிடுவாங்க!'
கண்களைக் கொஞ்ச நேரம் மூடிக் கொண்டார். நாக்கால் உதட்டை ஈரப்படுத்திக்கொண்டார். அருகிலுள்ள பிரின்டர், ஃபான்ட் பிரச்னையினால் பூச்சி பூச்சியாக எதையோ அடித்துத் தள்ளியிருந்தது.
ஆம்புலன்ஸில், 'ஏ.ஸி சரியா இல்லியே' என்றார். ஃபேனைத் தட்டிவிட்டு, அவர் பக்கம் திருப்பினேன். 'எனக்கு ஒண்ணும் சீரியஸ் இல்லை, டிரைவரிடம் மெதுவாவே போகச் சொல்லுப்பா.'
ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டுக் கிளம்பினேன். 27ம் தேதி காலையில் அவரது மூத்த மகன் ரங்காவிடமிருந்து அழைப்பு. 'அப்பாவுக்கு ரொம்ப முடியலை, சீக்கிரம் கிளம்பி வாப்பா' என்றார்.
சுஜாதா ரொம்ப சென்ஸிடிவ்வானவர். ஒருமுறை அவருக்கு வந்த கூரியர் தபாலை என்னிடம் கொடுத்து, 'இந்த கூரியர்ல ஏகப்பட்ட ஸ்டேப்ளர் பின் இருக்கு. ஏன் இவ்வளவு பின் அடிக்கிறாங்க, கையை ரொம்பக் குத்துறது' என்றார். இதனாலேயே அவர் வீட்டில் நிறைய பார்சல்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறதோ என்ற எண்ணம்கூட எனக்கு வந்ததுண்டு.
ஆனால், நான் மருத்துவமனை போன சமயம், அவர் உடலில் எல்லா இடங்களிலும் பைப்பும் ட்யூப்புகளும் செருகப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல், மானிட் டரில் எண்களும், 'பீப்' சத்தங்களும், விதவிதமான கோடுகளும்... பெருமாளே, இதெல்லாம் அவருக்குத் தெரியக் கூடாது என்று ரெங்கநாதரை வேண்டிக்கொண்டேன்.
'சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கேதான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கேதான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது' என்று அவர் தன் எழுபதாவது பிறந்த நாள் கட்டுரையில் எழுதியிருந்தார்.
சென்ற ஜூன் மாதம் அவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துக்கொண்டு போனேன். ஸ்ரீசூர்ணம் கேட்டு நெற்றியில் இட்டுக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளைச் சேவித்த பின், அவருக்கு ஏற்பட்ட மனநிறைவை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. 'எப்படியோ பெருமாள்ட்ட என்னைக் கொண்டு வந்து சேர்த்துட்டேப்பா!' என்றார் நெகிழ்வுடன். கோயிலில் ஏனோ சில இடங்களில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துகொண்டார். அதைக் 'கற்றதும் பெற்றதும்'ல் எழுதியிருந்தார்.
ஸ்ரீரங்கம் பயணம் முடிந்த பின், 'இந்த ட்ரிப்புக்கு நான் எவ்ளோ தரணும்?' என்றார். 'சிவாஜி படத்தின் பிரிவ்யூக்கு ஒரு டிக்கெட்' என்றேன். அதற்கும் ஒரு சிரிப்பு.
பெரிய பெரிய விஷயங்களை எழுதினாலும், சுஜாதாவுக்கு சின்னச் சின்ன ஆசைகள் நிறைய உண்டு. கடற்கரையில் வாக்கிங் போகும்போது, கிளிமூக்கு மாங்காய், வேகவைத்த கடலை வாங்கிச் சாப்பிடுவார். 'அது உடம்புக்கு ஆகாது' என்று முக்கால் பாகத்தை டிரைவரிடம் கொடுத்துவிடுவார். பம்பரம் வாங்கிக் கொண்டுவரச் சொல்லி விட்டுப் பார்ப்பதும், பீச்சில் குழந்தைகள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்ப்பதுமாக இருப்பார். அவர்களிடம், 'உன் பேர் என்ன?' என்று ஆர்வமாகக் கேட்பார். வித்தியாசமான பெயராக இருந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வார்.
'ஏம்பா, உன் பொண்ணுக்கு ஆண்டாள்னு பேர் வெச்சிருக்க, ஸ்கூல்ல கேலி பண்ண மாட்டாங்களா?'
'சார், மரகதவள்ளின்னே பேர் இருக்கும்போது...'
'மரகதவள்ளி நாளையே சுருக்கி மேகி ஆயிடுமே' என்றார் தனக்கே உரிய நகைச்சுவையுடன்.
சமீபத்தில் ஒரு முறை 'உன்னுடன் பைக்கில் வருகிறேன்' என்று அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என் பின்னால் உட்கார்ந்து கொண்டு, தன் வீடு வரை அழைத்துப் போகச் சொன்னார். 'இப்ப என்ன ஸ்பீட்?' என்று விசாரித்துவிட்டு, 'இன்னும் கொஞ்சம் வேகமா போ, பார்க்கலாம்!' என்று பைக் சவாரியை அனுபவித்தார்.
'ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்' தொகுப்புக்கு நான் கோட்டோவியங்கள் வரைய ஆசைப்பட்டபோது, அவரிடம் என்னென்ன வரைய வேண்டும் என்று கேட்டேன். ஒரு பேப்பரை எடுத்து, ரங்கு கடை எங்கே இருக்கும், அவர் வீடு, கோபுரங்கள், தெருக்கள் என்று ஏராளமான இடங்களை மேப் போல போட்டுக் காண்பித்தார். வரைந்து வந்து காண்பித்தபோது, மிகவும் ரசித்தார். அவரும் ஓர் ஓவியர்தான் என்பது பலருக்குத் தெரியாது. அவர் வரைந்த வாட்டர் கலர் படங்கள் முன்பு அவர் வீட்டில் மாட்டியிருக்கும். அதே போல், கணையாழியின் கடைசிப் பக்கத்திலும் சில சின்னச் சின்ன படங்கள் வரைந்துள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன் அவரின் பயோகிராஃபியை எழுத வேண்டும் என்று கேட்டேன். 'உண்மையைச் சொல்ல வேண்டி வரும்; கூடவேபிரச் னையும் வருமே' என்று யோசித் தார். போன வருடம் மீண்டும் அதே யோசனையைச் சொன்ன போது, 'ஓ, தாராளமா செய்ய லாமே!' என்றார் ஆர்வத்துடன். 'சில பகுதிகளை எழுதிட்டு வர்றேன், பாருங்க' என்றேன். 'நீ எழுதுறாப்ல எழுதாத; நான் எழுதுறாப்ல எழுது' என்று உற்சாகப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து, அவரைப் பேசவைத்து, சில பகுதிகளை ரெக்கார்ட் செய்தேன். பல தர்மசங்கடமான கேள்விகளுக்கு எளிமையாகப் பதில் சொன்னார். சில கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, கண்களில் நீர் வந்தது. அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள், கதைகளில் அவர் பயோகிராஃபி சம்பந்தமான பகுதிகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்...
'எல்லாமே ஒரு குறுக்கெழுத்துச் சதுரம் போல இருக்கிறது, மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என்று வார்த்தைகளுக்கான குறிப்புகள் கிடைக்கின்றன. வெள்ளைக் கட்டங்களை நிரப்புகிறோம். பல வார்த்தைகள் கிடைத்துவிட்டன. சில வார்த்தைகளுக்கு எழுத்துகள் தான் உள்ளன. சில வார்த்தைகள் காலியாகவே இருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அது நிரப்பப்படும்' என்று சுஜாதா எழுதிய வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
அவர் தேர்ந்தெடுத்துப் படிக்கும் புத்தகம் நிறைய. நவம்பர் மாதம், 'இப்ப எல்லாம் எதையும் படிக்கிறதில்லை; கண்ணும் ரொம்ப ஸ்ட்ரைன் ஆகறது. நான் இப்ப கொஞ்ச நேரமாவது படிக்கிற புஸ்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மட்டும்தான், அதுதான் எனக்கு எல்லாம்!' என்றார்.
அவருடன் 27ம் தேதி மாலை அவரது கடைசித் தருணங்களில் இருந்தபோது, அவர் படும் கஷ்டங்களைப் பார்க்க முடியாமல், அருகில் அமர்ந்து அவருக்குப் பிடித்த பாசுரங்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கத் தொடங்கிய சமயம், உயிர் அவரைவிட்டு வேகமாகப் பிரிந்துகொண்டு இருந்தது. உயிர் பிரிந்தபோது படித்தது, 'சிற்றஞ் சிறுகாலே...' என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது.
'மனித உயிர் என்பது வற்றாத ஓர் அதிசயம், அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால், ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும்' என்று சுஜாதா சொன்னது எவ்வளவு உண்மை!
இப்போது பிரிகிறோம், இனி எப்போது சந்திப்போம் சுஜாதா சார்?
- நன்றி விகடன்
Friday, March 07, 2008
Thursday, March 06, 2008
The Name is Rajinikanth
Veteran journalist Cho S Ramaswamy handed over the first copy of the book to the superstar’s daughter Soundarya Rajnikanth. Cho was being mischievous, ‘Rajnikanth is a believer in spiritualism but he is not a spiritualist, an observer of politics but not a politician and an actor but not a showman.’
Why did you zero in on Rajnikanth and not Kamal Haasan for your first book?
I felt he was the obvious choice because he was the superstar, and the hype surrounding Sivaji was so immense. When I searched for him on the Internet, I found out that he grew up motherless as a child, and had a very bad childhood. Later on, he had to work as a coolie, then a bus conductor and lastly became the superstar. I found the stories had so many gaps. But I thought the rags-to-riches story of Rajni was very fascinating. So, I decided to write a biography on Rajnikanth and started my work in March 2007.
How did you begin your work? Did you contact Rajniknath first?
No, I couldn’t contact him. He was shooting for Sultan in Holland. So, I met his wife through a common friend. I told her, ‘Ma’am I want to write a book on your husband’. She said there are a million books on him. She first thought I was yet another fan. When she came to know that I was an ophthalmologist, she was amused and gave me permission to go ahead.
He was sitting on the floor with his closed eyes, folded legs and locked fingers in ‘Gnana Mudra’. He looked strange and different with a turban on his head and the very long flowing beard. Some thing was there in his face that attracted her. She could not understand what that was.
She finished her ‘darshan’ and came out; she saw the man was walking in the corridor. Again something was happening in her, she could not understand what was that. She was telling herself, “a poor old man. I have to help him”. She ran to him, gave rupees ten in his hand and forced him to accept. He smiled, expressed a reverence like a ‘prasadam’ by keeping it in the forehead and thanked her by keeping the hand in prayer position (‘Namasthey’).
As she came out, she saw the man was getting into his Mercedes Benz, she was perplexed, shivered and ran to him and said, “Sir (Ayya!), Please forgive me, I did not do this to insult you. By seeing your dress and appearance, I thought you are struggling in life and offered you the money. It is a blunder. I am sorry. Please forgive me. Please give me back that money. I am sorry”.
The man with the fake beard and turban laughed and replied her politely, “Ammaa.. There is no mistake of yours. It is the other way. The creator is again and again reminding me through some body, “You are nothing. You are not special. Everybody is equal in front of me”. He keeps on sending this message again and again and today you happened to be a medium. That’s it. Thanks a ton”. His hand again went to prayer position, expressed gratitude to the lady and he went into his car.
When the lady realized the man was none other than Super star Rajini Kanth - Asia’s number one paid actor, he has left the place.
She did not know what to do. With tears in her eyes, she was starring at the direction that the car went.
SAS கான்பரென்ஸ்
நல்ல இந்தியா போயி குடும்பத்தோட 40 நாள் சந்தோசமா இருந்துட்டு வாங்க மீனாட்சி...
Sunday, March 02, 2008
பிரிவோம்... சந்திப்போம்...
உடன்பிறந்தவர்கள், செந்தகாரர்கள் யாரும் இல்லாமல் வளரும் விசாலட்சி அதற்கு எதிர்மறையாக கூட்டு குடும்பமாக வளரும் நடேசன். இவர்களின் திருமணத்திற்க்கு பிறகு உறவினர் மத்தியில் மிகக்சந்தோசமாக இருக்கும் விசாலட்சிக்கு வில்லனாக வருகிறது நடேசனின் டிரான்ஸ்பர்.
செந்த பந்தங்களை விட்டு போக வேண்டிய நிலை. நடேசனோ செந்த பந்தங்களை விட்டு தன் மனைவியுடன் வாழ ஆசையுடன் அவளையும் அழைத்து கொண்டு புது இடத்திற்கு செல்கிறான். கணவன் வேலைக்கு சென்றப்பிறகு தனிமையில் நாளுக்கு நாள் உறவுகளின் பாசத்திற்கு ஏங்குகிறாள். அவளுடைய நடவடிக்கை நாளுக்கு நாள் மாறுவதை அந்த ஊரில் இருக்கும் டாக்டரின் உதவியுடன் கண்டு தன் செந்த பந்தங்களோடு இணைவது தான் கதை.
வேறுவழி இல்லாமல் உறவுகளை மறந்து பணத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கும் இந்த உலத்தில் உறவுகள் இல்லாமல் தனிமையில் வாடும் கதையை எடுத்து எந்த ஒரு கவர்ச்சியில் சிக்காமல் அருமையான படைப்பை அளித்த இயக்குனர் திரு.கரு.பழனியப்பனுக்கு பாரட்டுக்கள்.
நடேசனுக்கும், விசாலட்சிக்கும் "ஒரு சொட்".
தமிழ்ச்சோலையின் பிறப்பு
தமிழ்த்தாயின் மடியில் தவழ்ந்து தமிழை தானமாக பெற்று இன்று பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தமிழ் மக்களோடு சேர்ந்து, தமிழ் வளர்க்கும் பணியின் ஒரு சிறு முயற்சி தான் இந்த தமிழ்ச்சோலை...
இந்த இதழை ஆரம்பித்த இரண்டு மாத்தில் கிடைத்த வரவேற்பு எங்களை ஆச்சரியபட வைத்தது.
இந்த மாத இதழை அனைவரும் http://www.artamilsangam.org/ என்ற இணையதளத்தில் சென்று பறித்து உண்டு மகிழலாம்.
அர்கன்ஸாஸ் தமிழ் சங்கத்தை உருவாக்கிய நம் முன்னோர்களுக்கு நன்றிகள். அத்தோடு சங்கம் வளர, எங்களுக்கு கடந்த 5 வருடமாக வாய்பளித்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகள் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த மாத இதழ், சோலையின் மரத்தில் இருந்து ஒவ்வொவரு கனியாக பூத்து தமிழுகும், நம் மக்களுக்கும் நல்ல சுவையை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Saturday, March 01, 2008
பேட்ரிக்கு திருமண அழைப்பு.
பேட்ரிக் ரெம்ப நாள் தேடுனதுக்கு அப்புறம் கடைசியா பாக்ஸ் ரன்ல நம்ம மனோகரன் அப்பார்ட்மென்ட்க்கு எதிரா புக் பண்ணிருந்த அப்பார்ட்மென்ட்க்கு சுருதியும், மேகலாவும் ஆரத்தி எடுக்க, நாங்க "வாராயன் தோழி வாராயோ... மணபந்தல் காண வாராயோ..." ன்னு பாடி அவங்களை உள்ளே அனுப்பி வைத்தோம்.
எற்கனவே எங்களை பத்தி பேட்ரிக், கீதாகிட்ட சொல்லிட்டதால நாங்க எங்களை பத்தி பீலா உடமுடியாம போயிடுச்சி. சுவாமி, சீனி, மீனாட்சி, ரமணா குடும்பம், மனோகரன் குடும்பம், பேட்ரிக் அண்ணன் ரிச்சி, நான் எல்லாரும் ஹால்ல உட்கார்ந்து ஜாலியா கல்யாண,ட்ரிப் பத்தி பேசிகிட்டு இருந்தோம். மேகலாவின் அருமையான காபி + டின்னர்க்கு நடுவே மார்ச் 1ம் தேதி ரிசப்சன் வைக்கலாம்ன்னு முடிவு பண்ணினோம்.
இந்த விசயத்தை நம்ம மக்கள் எல்லாருக்கும் போன் செய்து "மார்ச் 1ம் தேதி பாக்ஸ் ரன் கிளப் கவுஸ்ல ரிசப்சன் சாயங்காலம் 7.30 மணிக்கு"ன்னு சொல்லிட்டோம்.
நாங்க ரிசப்சன் நைட் டின்னருக்கு சிக்கன் பண்ண வேண்டியிருந்தால, சுவாமி கிச்சன் வேலையை பார்த்துகிட்டான். நான், மீனாட்சி, மனோகர், பேட்ரிக் சேர்ந்து ஹால்ல டெக்கரேட் பண்ணினோம்.
சுமார் 25ல இருந்து 30 பேமிலி ரிசப்சன்க்கு வந்து மண தம்பதிகளை சந்தோசமா வாழ்த்தினாங்க. விழா சிறப்பா நடந்தது. எல்லா ஒர்க்கும் முடிச்சிட்டு வீட்டுக்கு வர 1.30 A.M ஆனது(வீட்டுக்கு வர்ற வழியிலயே கொட்டாவி விட்டு சுவாமி கார்லயே தூங்கிடேன்..).
குறிப்பு: எங்க ரூம் மேட் சீனிக்கு உடல் நிலை காரணமா அவரால ரிசப்சன்ல கலந்துக்க முடியல. அவருடைய,சுவாமி, என்னுடைய சார்பா "நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் காலம் முழுக்க இங்கு வாழணும்"ன்னு தலைவர் பாட்டை பாடி வாழ்த்துறோம்.