tholaiththavan

Saturday, March 29, 2008

படித்ததில் பிடித்தது - 3

சுயத்தை தேடிய ஒரு இனத்தின் பயணத்தில் இன்று உலகம் எங்கும் முகவரி இழந்த ஈழத் தமிழரில் கலைந்து போன கனவுகளுடன் வாழும் ஒரு ஈழ தமிழிச்சியின் குரல்...

என் இந்திய நட்பே
என்ன சொல்லி புரிய வைப்பேன்
என் மண்ணை..


வீட்டு விருந்தாளியாய்
வந்தவர்களிடம்-எம்
நாட்டு நிலமைகளை
கொட்டிவிட்ட என்னன்னை
ஏன் இவ்வளவு நாளாய்
சொல்லவில்லை உன் சோகத்தை
என கேட்கும் உங்களிடம்....

நீங்கள் பரிதாபப்படுவதற்காய்
நாங்கள் ஒன்றும்
ஈழத்தில் பிறக்கவில்லை
உச்சுக் கொட்டி செல்வீர்கள்..
அப்புறம்..
வெள்ளி திரையின் மசாலாக்குள்ளும்
மரத்தை சுத்தும் 'டூயட்'க்குள்ளும்
காதலை தேடும் உங்களிடம்
என் மண்ணின் காதலை
எப்படி சொல்லிடுவேன்....

ஒரு நாள் உங்களால்
'கரண்ட்' இல்லாமல்
இருக்கமுடியுமா இல்லை
தொலைக்காட்சி இல்லாமல்
வாழ முடியுமா..
எப்படி சொல்லிடுவேன்
ஒரு சமுதாயமே
கற்கால வாழ்க்கை வாழ்ந்ததை..
நாங்கள் உடுத்திருந்த உடையோடு
ஊர் ஊராய் அலைந்ததை..
உங்கள் 'ரிவி'த்திரையில்
சில எழுத்துக்கள்
வெறும் வார்த்தைகள் தோன்றும்
"மென் இதயங்கள் தவிர்த்துவிடுங்கள்
கொடூரமான காட்சிகள்" என
ஆனால் என் மண்ணிலோ
நித்தம் சிதறிய உடல்களோடு
ரத்தமணத்துடன் நாம்
வாழ்ந்ததை...

நீங்கள் பாருங்கள்
உங்கள் வேலைகளை..
கிரிக்கெட்டில் தொலைந்து
போகவேண்டும்...
உங்கள் ஆதரச நாயகனின்
கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம்
செய்ய வேண்டும் ..
உங்களுக்கு ஏது நேரம்
எங்களுக்காய்
நின்று நிதானித்து
திரும்பிப் பார்க்க...

நாங்கள்
நாங்களாகவே
பிறந்தோம்..
போராடுவோம்..
சாவோம் ஆனால்
மீண்டும்
புதிதாய் பிறப்போம்..


- நட்புடன் ஸ்நேகிதி.....

0 Comments:

Post a Comment

<< Home