tholaiththavan

Sunday, March 16, 2008

நினைத்தேன்... சொல்கிறேன்...


நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் ஊரில் ஒவ்வொரு கால மாற்றத்திற்க்கு(சில மாதங்களுக்கு) ஏற்றாற் போல சிறுவர்கள் விளையாட்டான கபடி ஆடுதல்,

பம்பரத்தை வைத்து வட்டக்குத்து, திண்டுக்கல் விளையாடுதல்,

சிகரெட் அட்டையயை மடக்கி வைத்து செதுக்கு கல் ஆடுதல்,

கோழிகுண்டை வைத்து பச்சா விளையாடுதல்,

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களை சிகரெட் அட்டையில் ஒட்ட வைத்து ஆடும் அனைவரும் லாட்டரியை பந்தயமாக வைத்து ஆடுதல்,



ரப்பர் பந்தை வைத்து நண்பர்களை இரு அணிகளாக பிரித்து, எங்களுக்கு நடுவில் 6 அடி தூரத்தில் 7 சிறு வட்டமான கட்டைகள் அல்லது 7 உடைந்த கற்களை ஒரு சிறு வட்டத்தி வைத்து அதை நோக்கி பந்தை தூக்கி எறிய வேண்டும். பந்தை எதிரணி எடுத்து எங்கள் மேல் எறிந்தால் நாங்கள் தோற்றோம். பந்து எறி வாங்குவதற்கு முன், எங்கள் அணி அந்த சிதறிய 7 கட்டைகளை/கற்களை சேகரித்து அந்த சிறு வட்டதில் வைத்தால் நாங்கள் வென்றோம்.

வீட்டிலேயே விளையாடுவதற்க்காக ஆடுபுலி ஆட்டம், பரமபதம், பேங்கர் - ஒவ்வொருவருக்கும் ஆட்ட ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை தரப்படும். தாயக்கட்டையை உருட்டி, அதில் விழுந்த எண்களுக்கு ஏற்றாற்ப்போல் ஒவ்வொருவரு நாட்டிற்க்கு செல்ல வேண்டும். உங்கள் கையிருப்பு பணத்தை வைத்து நாட்டை வாங்கிய பின், மற்றவர்கள் உங்கள் நாட்டிற்க்கு வந்தால், அவர்கள் உங்களுக்கு வரி கட்ட வேண்டும். ஆட்ட இறுதில் யாரிடம் அதிகத்தொகை இருக்கிறதோ அவர்களே வெற்றி பெற்றவர் ஆவார்.



நொண்டியாடுதல், கோ-கோ ஆட்டம் என விளையாடுவோம்.


நான் கடந்த வருடம் இந்திய பயணத்தின் போது இந்த சிறுவர்கள் விளையாட்டுக்கள் எல்லாம் மறந்து/மறைந்து போனதை உணர்ந்தேன்.

இப்போது எல்லாம் வருடத்தில் அனைத்து மாதங்களிலும் 80 சதவிகித சிறுவர்கள் நேரத்தை செலவிடுவது தொலைக்காட்சியில் அல்லது வீடியோ கேம்ஸில். மீதமுள்ள 20வது சதவிகித குழந்தைகளும் சிறுவர்களும் தொலைக்காட்சியிலோ அல்லது வீடியோ கேம்ஸிலோ மூழ்கி தொலைந்துப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.....


இங்குள்ள புகைப்படங்கள் என்னுடைய கடந்த வருட இந்திய பயணத்தின் போது அருப்புக்கோட்டையில் என்னுடைய தெருவில் எடுத்தது.

6 Comments:

  • இது என்ன விளையாட்டு...

    பம்பரத்தி, ஆக்கர் தெரியும்...

    இதெல்லாம் தெரியவில்லையே.. :(

    பு.த.செ.வி..

    //பம்பரத்தை வைத்து வட்டக்குத்து, திண்டுக்கல் விளையாடுதல்,
    //

    By Blogger TBCD, at 3/27/2008 5:09 PM  

  • நண்பரே, வட்டக்குத்துவும் ஆக்கரும் ஒன்று தான்.

    திண்டுக்கல் என்பது சிறுவர்கள் 6,7 பேர் சேர்ந்து கொண்டு 1,2,3 சொல்லி அனைவரும் ஒரே நேரத்தில் பம்பரத்தை விட்டு அதை கையில் எடுக்க வேண்டும். கடைசியாக எடுத்தவரின் பம்பரம் பத்து அடிகளுக்கு இடையே கிழிக்க பட்ட கோட்டின் ஒரு முனையில் வைக்கபடும். மற்றவர்கள் அந்த பம்பரத்தின் மேல தங்கள் பம்பரத்தை வைத்து அடித்து இந்த முனைக்கு கொண்டு வர வேண்டும். வழியில் யாருடைய பம்பரமாவது சுழலாமல் இருந்து விட்டால், இருக்கும் பம்பரத்தை எடுத்து விட்டு சுழலாதவரின் பம்பரம் வைக்கபடும். அடுத்த முனையை அடைந்த பின், ஆடிய அனைவரும் சேர்ந்து தேற்றவரின் பம்பரத்தை, தங்களின் பம்பரத்தின் ஆணியை வைத்து கல்லால் அடிப்பார்கள். முழுமையாக சொல்ல வேண்டும் என்றால், தேற்றவரின் பம்பரம் உடைக்கபடும்.

    By Blogger tholaiththavan, at 3/29/2008 8:38 AM  

  • அட டே...

    அப்படியா,

    நான், வட்டம் போட்டு விளையாடுறது மட்டும் தான் விளையாடியிருக்கேன்..


    ***

    திரட்டிகளில் பதிவை இனைக்கவில்லையோ..?

    By Blogger TBCD, at 3/29/2008 8:43 AM  

  • ஓ... அப்படியா...

    இனி இது போன்ற விளையாட்டுக்களை நாம் ஆட நினைத்தாலும்... முடியாதே, என்ன செய்வது..

    "திரட்டிகளில் பதிவை இனைக்கவில்லையோ..?" எப்படி இணைப்பது என்று வழி காட்டுகிறீர்களா?

    By Blogger tholaiththavan, at 3/29/2008 8:59 AM  

  • என் முகவரி...

    velaiilley at gmail dot com

    தொடர்பு கொள்ளுங்கள்..சொல்லுகிறேன்..

    By Blogger TBCD, at 3/29/2008 9:01 AM  

  • நன்றி நண்பரே... உங்களை பிறகு தொடர்பு கொண்டு வழிமுறைகளை பெற்றுக்கொள்கிறேன். :)

    By Blogger tholaiththavan, at 3/29/2008 9:14 AM  

Post a Comment

<< Home