tholaiththavan

Thursday, March 13, 2008

அம்மா... அப்பா...

'தழிழுக்கு தலைவணக்கம்' எனும் சொற்பொழிவிலிருந்து...
நம் வீட்டில் கூட தற்போது தமிழில் பேசுவதை மறந்து விட்டோம். குழந்தைகள் பெற்றோரை 'மம்மி, டாடி' என்று தான் அழைக்கின்றனர். ஆனால் தமிழில் 'அம்மா' எனும் வார்த்தை எப்படி உருவானது என்பது பலருக்கு தெரியாது.

அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக 'அ' எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும், 10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தை வைத்துள்ளனர்.

அதே போன்று தான் 'அப்பா' என்ற சொல்லும் அமைத்துள்ளது. இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற சொல்லில் 'ம்' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அப்பா எப்போதும் வலிமையானவர் என்பதால் அதில் 'ப்' எனும் வல்லின எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ் மொழி என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ள மொழி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

0 Comments:

Post a Comment

<< Home