tholaiththavan

Saturday, April 26, 2008

பூமி நாள் கொண்டாட்டம்...

அம்மா லிட்டில் ராக்க்கு வந்து இன்றோடு ஒரு வாரம் ஆச்சி. அவங்க கூட வந்ததில் இருந்து என்னால் நேரம் ஒதுக்கி இருக்க முடியவில்லை. அலுவலக வேலை மற்றும் சிறு சிறு விசயங்கள் என்னுடைய நேரத்தை எடுத்துக்கொண்டது.

இன்று காலை எழும்போதே இன்று முழுவதும் அம்மாவுடன் இருப்பது என்று நினைத்து கொண்டேன். காலை வீட்டிற்க்கு தேவையான பொருட்களை வாங்க அம்மாவை சாம்ஸ் கிளப்புக்கு கூப்பிட்டு போகலாம் என்று இருக்கும் போது பரம் அண்ணணிடம் இருந்து "இன்னைக்கி கிளின்ட்டன் லைப்ப்ரேரில எர்த் டே பங்ஷ்ன், போகலாமா" என்று போன் வந்தது. சரி என்று அம்மாவை அழைத்துக்கொண்டு பூமி நாள் கொண்டாட்டத்திற்க்கு பரம் அண்ணன் குடும்பத்தாருடன் சென்று வந்தோம். அங்கு எடுத்த புகைப்படங்கள் இங்கே...

ஸ்ரீக்கா, பிரித்திகா மற்றும் நான்...

கிளின்ட்டன் நூலகத்தின் முன் - பாரதி அம்மா, என் அம்மா, ஸ்ரீக்கா மற்றும் பிரித்திகா...

அங்கு நடைப்பெற்ற இசை மற்றும் நடன விழாவில் நமது மக்களின் பங்களிப்பும் இருந்தது...
அம்மா...

சிறு வடிவ மாதிரி வெள்ளை மாளிகையின் முன் - குமார், அம்மா, பாரதி அம்மா மற்றும் நான்...
அனைவரும் மகிழ்ச்சியோடு எங்கள் பொழுதை கழித்து, சந்தோசத்தை கூட்டினோம்...

சித்திரை திருநாள் புகைப்படங்கள் - 3












சித்திரை திருநாள் புகைப்படங்கள் - 2







சித்திரை திருநாள் புகைப்படங்கள் - 1








Tuesday, April 22, 2008

புது வாழ்க்கை...

Saturday, April 19, 2008

அம்மா வந்தாச்சு...

இன்று எனக்கு மகிழ்ச்சிகரமான நாள்.... ஏனென்றால் என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியது.

ஆம்... அம்மா இன்று என்னோடு லிட்டில் ராக்கில்...


அவர்களின் வருகைக்காக கடந்த மூன்று நாட்களாக வீடு, என்னுடைய காரை, சுத்தபடுத்துவது, ஆபிஸ் வேலை என பிசியாக இருந்தேன். விமானம் 4:30க்கு கொச்டொன்க்கு வந்தவுடன் மீனாட்சி எனக்கு போன் செய்து நல்லபடியாக வந்து விட்டோம். லிட்டில் ராக்க்கு அடுத்த பிளைட் இன்னும் 30 நிமிடத்தில் கிளம்பும் என்று சொன்னார். மீனாட்சி போனில் சார்ஜ் அவுட். பைலெடிடம் போன் வாங்கி இந்த விசயத்தை சென்னார். இங்கு நான் மற்றும் என் நண்பர்கள், பரம் குடும்பம் என ஏர்போர்ட் சென்று அம்மாவிற்க்கு காத்திருந்தோம்...

சிறிது நேரம் கழித்து என் அம்மா, பாரதி அம்மா, மீனாட்ச்சி, மாருதி அம்மா ஆகியோர் வந்தனர்....

அம்மாவை என்னுடைய காரில் ஏற்றி கொண்டு வீட்டிற்க்கு வரும்போது பிரயாண அனுபவங்களை கேட்டேன். ரசித்தேன். தங்கைக்கு போன் செய்து அம்மா வந்த் விசயத்தை செல்லி விட்டு, அனுபவங்களை கேட்க ஆரம்பித்தேன்....


இன்று என் மகிழ்ச்சியயை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை....


அம்மாவை ஏர்ப்போர்ட்டில் வரவேற்க வந்த பேட்ரிக், மனோகர், கோவிந்த், லெனின் குடும்பத்தாருக்கும், சுரேஷ், இப்ராகிம், சுவாமி மற்றும் சீனிக்கும் என்னுடைய நன்றிகள்.

Friday, April 18, 2008

விளம்பரம் 5 - தேவை ஆசிரியர்கள்...

தமிழ் வகுப்புகளை மிக சிறப்பாக எடுத்து வரும் சுஜாதா, கோமதி, பாரதி, சுமதி, ஜொசிதா, பெமி ஆகியோருக்கு துணையாக மேலும் ஆசிரியர்கள் தேவை என்பதை கூறும் விளம்பரம்...
http://www.youtube.com/watch?v=WNnMNRR8PRM லிங்கை கிளிக் செய்யவும்.... அல்லது கீழே பார்க்கவும்.

இந்த விளம்பரத்தை தயாரித்து முடிக்கும் போது தான் சென்ற வார சனிக்கிழமை காலை மணி 6:37 ஆனது.

விளம்பரம் 4 - அனைத்து தமிழ் சங்க நிகழ்ச்சிகளின் DVD தொகுப்பு...

கடந்த சில வருடங்களில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் இருந்து புகைப்படங்களை சேகரித்து DVD தொகுப்புக்காக விளம்பரம் செய்யும் போது சுவாமி என்னிடம், "டாய் ராஜ்குமார், போதும்டா சோக பாடல்கள், ஒரு ஹய் பிட்ச்ல ஒரு பாட்டு 12Bல இருந்து எடுத்து போட்றா" என்றான். அவனுடைய விருப்பத்திற்கிணங்க அந்த படத்தில் உள்ள ஒரு குத்து பாட்டை சேர்த்து உருவான விளம்பரம் இதோ...

http://www.youtube.com/watch?v=QSRokfPdbic லிங்கை கிளிக் செய்யவும்.... அல்லது கீழே பார்க்கவும்.


விளம்பரம் 3 - அர்கான்சாஸ் தமிழ் சங்க இணைய தளம் பற்றி...

சுவாமி, தமிழ் சங்க இணைய தளத்துக்காக உருவாக்கிய விளம்பரம் இதோ...

http://www.youtube.com/watch?v=oR8XlL8z81M
லிங்கை கிளிக் செய்யவும்.... அல்லது கீழே பார்க்கவும்.

விளம்பரம் 2 - கோடைக்கால விளையாட்டுக்களுக்கு தயாராகுங்கள்...

தமிழ் மொழி மற்றும் கலாச்சார வகுப்பு விளம்பரம் நன்றாக செய்த மகிழ்ச்சியில் அடுத்த இலக்கான கோடைக்காலத்தில் நாங்கள் விளையாட போகும் கபடி, கில்லி, கோலி, பம்பரம், பல்லாங்குழி,பெண்களுக்கான கோலப்போட்டி என தமிழக விளையாட்டுக்களை வைத்து எனக்கு மிகவும் பிடித்த "ஞாபகம் வருதோ... ஞாபகம் வருதோ..." படலால் உருவான உங்கள் சிறு வயதை தொட்டுப்பார்க்க கூடிய விளம்பரம் இதோ...

http://www.youtube.com/watch?v=j0s-A5PLluE லிங்கை கிளிக் செய்யவும்.... அல்லது கீழே பார்க்கவும்.


விளம்பரம் 1 - தமிழ் வகுப்புகளுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள்...

இந்த வருடம் நாம் எந்த ஒரு நிகழ்ச்சியும் செய்யவில்லையே... நாம் ஏன் தமிழ்ச்சங்கத்திற்காக விளம்பரங்கள் தயாரித்து ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் இடையே திரையில் போடலாமே என்று சுவாமி கூறினான். அது நல்ல யோசனையாகப்பட்டது. சரி முதலில் தமிழ் மொழி மற்றும் கலாச்சார வகுப்பு சம்பந்தமாக செய்யலாம் என்று யோசனை செய்து உருவானது தான் கீழே உள்ள படங்கள்....


















இவற்றை கொண்டு அனிமோட்டோ,தலைவரின் முத்து படத்தின் பின்னனி இசை உதவியுடன் 47 நொடிகள் ஓடக்கூடிய நிகழ்படத்தை தயாரித்தோம்.
http://www.youtube.com/watch?v=1PCh9Z8qqzE லிங்கை கிளிக் செய்யவும்.... அல்லது கீழே பார்க்கவும்.

மற்றொரு பிரதி...
http://www.youtube.com/watch?v=sgMrEq12kqU லிங்கை கிளிக் செய்யவும்.... அல்லது கீழே பார்க்கவும்.

Saturday, April 12, 2008

சித்திரை திருநாள் விழா இனிதாக முடிந்தது.

இன்று லிட்டில் ராக்கில் உள்ள Unitarian Universalist Churchல் சித்திரை திருநாள் விழா சரியாக மாலை 6.15க்கு தொடங்கியது. முதலாவதாக பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை சொல்லுதலுடன் "திருகுறள் நேரம்" நிகழ்ச்சி ஆரம்பித்தது. சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வெளிவந்த தமிழ்ச்சோலையில் உள்ள 6 திருக்குறளை கூற வேண்டும். இந்த போட்டிக்கு தமிழ்ச்சோலை படைப்பு குழு பொறுப்பாளர்களான சுரேஷ், இப்ராஹீம் மற்றும் நானும் நடுவராக இருந்தோம்.

அமெரிக்க மண்ணிலே பிறந்து தமிழ் மொழியை பேச மட்டுமே செய்து வந்த குழந்தைகள் இந்த போட்டிக்கு மிக ஆர்வமாக 2 வயதில் இருந்து 14 வயது வரை கலந்து கொண்டு மிக அருமையாக சொன்னார்கள்.

போட்டியில் கடினமானது நடுவராக இருப்பது, அதிலும் குழந்தைகள் பங்கு பெறும் நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது. போட்டி முடிந்ததும், நாங்கள் மூவரும் போட்டியின் போது அளித்த மதிப்பெண்களை வைத்து முதல் பரிசை ஜெஸ்ரின்க்கும், இரண்டாவது பரிசை வேதவள்ளிக்கும், மூன்றாவது பரிசை ராகுலுக்கும், மிராகுலினுக்கும் பகிர்ந்து தரலாம் என முடிவெடுத்தோம்.

6:45க்கு லிட்டில் ராக் மேயர் திரு.மார்க் ஸ்டோட்லா தன் துணைவியாருடன் விழாவிற்கு வருகை தந்தார்.

தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்ட பின் அமெரிக்க தேசிய கீதம் பாடப்பட்டது.

பிறகு மேயரின் கைகளால் தமிழ் பாட வகுப்புகளின் பாடத்திட்டம் வெளியிட அதை தமிழ் பாட ஆசிரியர்களான சுஜாதா, பாரதி, சுமதி, ஜொசிதா மற்றும் பெமி பெற்றுக்கொண்டனர்.
பிறகு மேயர் திருகுறள் நேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசை வழங்கி விட்டு, வாழ்த்துரை கூறினார்.

எங்கள் தமிழ் சங்க தலைவர் சுவாமி நாதன் மேயருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

பரதத்தில் இருந்து சினிமா பாடல், நாட்டுபுற பாடல் வரை திவ்யா, திக் விஜய், ப்ரித்திகா, பவ்யா, ஸ்ரீ, ராகுல், அவினாஸ், நிவேதிதா, மிராகுலின்,மோனு,வேத வள்ளி, ஜெஸ்ரின், பிரியங்கா, குமார், தேவா, நந்த கோபால், சர்மா, நாகப்பன்,கார்த்திக் மற்றும் விஜய் ஆகியோர் ஆடி எங்களை அசர வைத்தனர்.

10 வயது ஸ்ரீ ஹரி உலக நீதி சொன்னார், 65 வயது மணிசிதம்பரம் செண்டை வாசித்தார், 3 - 5 வயது வரை உள்ள ரேகா, அரவிந்த், சுரபி, ஆதித்யா ஆகியோர் நவீன கிருஷ்ணர்,குசேலர் நாடகம் நடத்தி எங்களை மெய் சிலிர்க்க வைத்தனர்.

இறுதியாக கீதா வந்தே மாதரத்திற்கு நடனமாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

விழாவை நிவேதிதா தமிழிலும், பிங்கி ஆங்கிலத்திலும், உலக நாதனின் கணீர் குரலாலும் நிகழ்ச்சியயை அருமையாக தொகுத்து வழங்கினார்கள்.

ஒவ்வொரு நிகழ்ச்சியின் இடையில் நானும், சுவாமியும் தமிழ்ச்சங்கத்திற்காக தயாரித்த விளம்பரங்களான தமிழ் வகுப்புக்கு குழந்தைகள் அனுப்புங்கள், தமிழ்ச்சங்க இணைய தளம், அனைத்து சங்க நிகழ்ச்சிகளின் DVD தொகுப்பு, தமிழ் வகுப்பு எடுக்க ஆசிரியர்கள் தேவை, இந்த வருட கோடை காலத்தில் ஆட இருக்கும் கபடி, கோலி, கில்லி, பம்பரம் என தமிழக விளையாடுக்கள் பற்றி, மேயருக்கு நன்றி ஆகியவற்றை திரையிட்டு காண்பித்தோம். அனைவரும் எங்களை மிகவும் பாராட்டினார்கள்.

மேயர் நிகழ்ச்சியயை துவக்கி வைத்து விட்டு ஒரு மணி நேரத்தில் கிளம்புவதாக இருந்தது ஆனால் எங்களின் கலை மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்து கிளம்ப மனம் இல்லாமல் இரண்டரை மணி நேரம் தன் துணைவியாருடன் நிகழ்ச்சியயை கண்டுகளித்தது எங்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

திருகுறள் நேரம், கலைநிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

செயளாலர் முனைவர் மகிழ் விழாவிற்கு வந்த அனைவரையும் வாழ்த்தி நன்றி கூறினார்.

இறுதியாக நமது தேசியகீதம் பாட பட்டு நிகழ்ச்சி முடிவடைந்தது.

அப்புறம் அரங்கை சுத்தப்படுத்தி விட்டு வீட்டிற்கு வர மணி இரவு 12:05 ஆனது.


என்னடா, கடைசி மூணு பிளாக்குகளா 3:50, 3:45 , 6:37ன்னு போட்டுருக்கு, ஆனா மேட்டரு எதுவுமே போடலயேன்னு சொல்லுறது கேக்குது, அது எல்லாம் நானும், சுவாமியும் சங்கத்துகாக அட்வடைஸ்மெண்ட் பண்ணிட்டு காலையில தூங்க போன நேரங்க... கடைசி மூணு நாள்ல மொத்தமா 11 மணி நேரம் தாங்க தூங்கி இருக்கோம்.

நாங்க பண்ணின அட்வடைஸ்மெண்டை பத்தி அடுத்த பிளாக்குகளா சொல்றேங்க...

6:37

6:37 AM

Friday, April 11, 2008

3:45

3:45 AM

Thursday, April 10, 2008

3:50

3:50 AM

Tuesday, April 08, 2008

சித்திரை திருநாள் - இன்னும் மூன்று நாள் தொலைவில்...


இந்த வருட சித்திரை திருநாள் விழா கொண்டாட்டத்திற்கு இன்னும் மூன்று நாள் தான் இருக்கின்றது.

அர்கன்ஸாஸ் தமிழ் சங்க நண்பர்கள் அனைவரும் அணி,அணியாக பிரிந்து, கடமைகளை பகிர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக லிட்டில் ராக் மேயர் திரு.மார்க் ஸ்டோட்லாவை அழைத்துள்ளோம்.

குழந்தைகள் ஆடல், பாடல் நிகழ்ச்சி பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் பல செய்திகளை விழா முடிந்ததும் இங்கே புதுப்பிக்கிறேன்....

Tuesday, April 01, 2008

தமிழ்ச்சோலையில் நான்காவது கனி

அர்கன்ஸாஸ் தமிழ் சங்க உறுப்பினர்களின் படைப்பை சேகரித்து, கடந்த மூன்று நாட்களாக தீவிர உழைப்பிற்கு பின், இன்று தமிழ்ச்சோலையில் உள்ள மரத்தில் நான்காவது கனி பழுத்தததை மிக மகிழ்ச்சியோடு சொல்ல விரும்புகிறேன்.

இந்த கனி நன்றாக ருசிக்க உதவிய அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.

இப்படிக்கு
தமிழ்ச்சோலை படைப்பு குழு
சுரேஷ், இப்ராஹீம் மற்றும் நான்

நீங்களும் சுவையை ரசிக்க, கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.
http://www.artamilsangam.org/images/stories/thamizhcholai_apr2008.pdf