பேட்ரிக்கு திருமண அழைப்பு.
எங்க ரூம் மேட் பேட்ரிக்கு இந்த வருசம் ஜனவரி மாசம் 20ம் தேதி சென்னையில கீதாவுடன் கல்யாணம் நல்லபடியாக நடந்தது. அவங்க லிட்டில் ராக்க்கு பெப்ரவரி 21ம் தேதி இந்தியாவில இருந்து வந்தாங்க.
பேட்ரிக் ரெம்ப நாள் தேடுனதுக்கு அப்புறம் கடைசியா பாக்ஸ் ரன்ல நம்ம மனோகரன் அப்பார்ட்மென்ட்க்கு எதிரா புக் பண்ணிருந்த அப்பார்ட்மென்ட்க்கு சுருதியும், மேகலாவும் ஆரத்தி எடுக்க, நாங்க "வாராயன் தோழி வாராயோ... மணபந்தல் காண வாராயோ..." ன்னு பாடி அவங்களை உள்ளே அனுப்பி வைத்தோம்.
எற்கனவே எங்களை பத்தி பேட்ரிக், கீதாகிட்ட சொல்லிட்டதால நாங்க எங்களை பத்தி பீலா உடமுடியாம போயிடுச்சி. சுவாமி, சீனி, மீனாட்சி, ரமணா குடும்பம், மனோகரன் குடும்பம், பேட்ரிக் அண்ணன் ரிச்சி, நான் எல்லாரும் ஹால்ல உட்கார்ந்து ஜாலியா கல்யாண,ட்ரிப் பத்தி பேசிகிட்டு இருந்தோம். மேகலாவின் அருமையான காபி + டின்னர்க்கு நடுவே மார்ச் 1ம் தேதி ரிசப்சன் வைக்கலாம்ன்னு முடிவு பண்ணினோம்.
இந்த விசயத்தை நம்ம மக்கள் எல்லாருக்கும் போன் செய்து "மார்ச் 1ம் தேதி பாக்ஸ் ரன் கிளப் கவுஸ்ல ரிசப்சன் சாயங்காலம் 7.30 மணிக்கு"ன்னு சொல்லிட்டோம்.
நாங்க ரிசப்சன் நைட் டின்னருக்கு சிக்கன் பண்ண வேண்டியிருந்தால, சுவாமி கிச்சன் வேலையை பார்த்துகிட்டான். நான், மீனாட்சி, மனோகர், பேட்ரிக் சேர்ந்து ஹால்ல டெக்கரேட் பண்ணினோம்.
சுமார் 25ல இருந்து 30 பேமிலி ரிசப்சன்க்கு வந்து மண தம்பதிகளை சந்தோசமா வாழ்த்தினாங்க. விழா சிறப்பா நடந்தது. எல்லா ஒர்க்கும் முடிச்சிட்டு வீட்டுக்கு வர 1.30 A.M ஆனது(வீட்டுக்கு வர்ற வழியிலயே கொட்டாவி விட்டு சுவாமி கார்லயே தூங்கிடேன்..).
குறிப்பு: எங்க ரூம் மேட் சீனிக்கு உடல் நிலை காரணமா அவரால ரிசப்சன்ல கலந்துக்க முடியல. அவருடைய,சுவாமி, என்னுடைய சார்பா "நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் காலம் முழுக்க இங்கு வாழணும்"ன்னு தலைவர் பாட்டை பாடி வாழ்த்துறோம்.

0 Comments:
Post a Comment
<< Home