tholaiththavan

Saturday, April 12, 2008

சித்திரை திருநாள் விழா இனிதாக முடிந்தது.

இன்று லிட்டில் ராக்கில் உள்ள Unitarian Universalist Churchல் சித்திரை திருநாள் விழா சரியாக மாலை 6.15க்கு தொடங்கியது. முதலாவதாக பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை சொல்லுதலுடன் "திருகுறள் நேரம்" நிகழ்ச்சி ஆரம்பித்தது. சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வெளிவந்த தமிழ்ச்சோலையில் உள்ள 6 திருக்குறளை கூற வேண்டும். இந்த போட்டிக்கு தமிழ்ச்சோலை படைப்பு குழு பொறுப்பாளர்களான சுரேஷ், இப்ராஹீம் மற்றும் நானும் நடுவராக இருந்தோம்.

அமெரிக்க மண்ணிலே பிறந்து தமிழ் மொழியை பேச மட்டுமே செய்து வந்த குழந்தைகள் இந்த போட்டிக்கு மிக ஆர்வமாக 2 வயதில் இருந்து 14 வயது வரை கலந்து கொண்டு மிக அருமையாக சொன்னார்கள்.

போட்டியில் கடினமானது நடுவராக இருப்பது, அதிலும் குழந்தைகள் பங்கு பெறும் நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது. போட்டி முடிந்ததும், நாங்கள் மூவரும் போட்டியின் போது அளித்த மதிப்பெண்களை வைத்து முதல் பரிசை ஜெஸ்ரின்க்கும், இரண்டாவது பரிசை வேதவள்ளிக்கும், மூன்றாவது பரிசை ராகுலுக்கும், மிராகுலினுக்கும் பகிர்ந்து தரலாம் என முடிவெடுத்தோம்.

6:45க்கு லிட்டில் ராக் மேயர் திரு.மார்க் ஸ்டோட்லா தன் துணைவியாருடன் விழாவிற்கு வருகை தந்தார்.

தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்ட பின் அமெரிக்க தேசிய கீதம் பாடப்பட்டது.

பிறகு மேயரின் கைகளால் தமிழ் பாட வகுப்புகளின் பாடத்திட்டம் வெளியிட அதை தமிழ் பாட ஆசிரியர்களான சுஜாதா, பாரதி, சுமதி, ஜொசிதா மற்றும் பெமி பெற்றுக்கொண்டனர்.
பிறகு மேயர் திருகுறள் நேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசை வழங்கி விட்டு, வாழ்த்துரை கூறினார்.

எங்கள் தமிழ் சங்க தலைவர் சுவாமி நாதன் மேயருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

பரதத்தில் இருந்து சினிமா பாடல், நாட்டுபுற பாடல் வரை திவ்யா, திக் விஜய், ப்ரித்திகா, பவ்யா, ஸ்ரீ, ராகுல், அவினாஸ், நிவேதிதா, மிராகுலின்,மோனு,வேத வள்ளி, ஜெஸ்ரின், பிரியங்கா, குமார், தேவா, நந்த கோபால், சர்மா, நாகப்பன்,கார்த்திக் மற்றும் விஜய் ஆகியோர் ஆடி எங்களை அசர வைத்தனர்.

10 வயது ஸ்ரீ ஹரி உலக நீதி சொன்னார், 65 வயது மணிசிதம்பரம் செண்டை வாசித்தார், 3 - 5 வயது வரை உள்ள ரேகா, அரவிந்த், சுரபி, ஆதித்யா ஆகியோர் நவீன கிருஷ்ணர்,குசேலர் நாடகம் நடத்தி எங்களை மெய் சிலிர்க்க வைத்தனர்.

இறுதியாக கீதா வந்தே மாதரத்திற்கு நடனமாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

விழாவை நிவேதிதா தமிழிலும், பிங்கி ஆங்கிலத்திலும், உலக நாதனின் கணீர் குரலாலும் நிகழ்ச்சியயை அருமையாக தொகுத்து வழங்கினார்கள்.

ஒவ்வொரு நிகழ்ச்சியின் இடையில் நானும், சுவாமியும் தமிழ்ச்சங்கத்திற்காக தயாரித்த விளம்பரங்களான தமிழ் வகுப்புக்கு குழந்தைகள் அனுப்புங்கள், தமிழ்ச்சங்க இணைய தளம், அனைத்து சங்க நிகழ்ச்சிகளின் DVD தொகுப்பு, தமிழ் வகுப்பு எடுக்க ஆசிரியர்கள் தேவை, இந்த வருட கோடை காலத்தில் ஆட இருக்கும் கபடி, கோலி, கில்லி, பம்பரம் என தமிழக விளையாடுக்கள் பற்றி, மேயருக்கு நன்றி ஆகியவற்றை திரையிட்டு காண்பித்தோம். அனைவரும் எங்களை மிகவும் பாராட்டினார்கள்.

மேயர் நிகழ்ச்சியயை துவக்கி வைத்து விட்டு ஒரு மணி நேரத்தில் கிளம்புவதாக இருந்தது ஆனால் எங்களின் கலை மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்து கிளம்ப மனம் இல்லாமல் இரண்டரை மணி நேரம் தன் துணைவியாருடன் நிகழ்ச்சியயை கண்டுகளித்தது எங்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

திருகுறள் நேரம், கலைநிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

செயளாலர் முனைவர் மகிழ் விழாவிற்கு வந்த அனைவரையும் வாழ்த்தி நன்றி கூறினார்.

இறுதியாக நமது தேசியகீதம் பாட பட்டு நிகழ்ச்சி முடிவடைந்தது.

அப்புறம் அரங்கை சுத்தப்படுத்தி விட்டு வீட்டிற்கு வர மணி இரவு 12:05 ஆனது.


என்னடா, கடைசி மூணு பிளாக்குகளா 3:50, 3:45 , 6:37ன்னு போட்டுருக்கு, ஆனா மேட்டரு எதுவுமே போடலயேன்னு சொல்லுறது கேக்குது, அது எல்லாம் நானும், சுவாமியும் சங்கத்துகாக அட்வடைஸ்மெண்ட் பண்ணிட்டு காலையில தூங்க போன நேரங்க... கடைசி மூணு நாள்ல மொத்தமா 11 மணி நேரம் தாங்க தூங்கி இருக்கோம்.

நாங்க பண்ணின அட்வடைஸ்மெண்டை பத்தி அடுத்த பிளாக்குகளா சொல்றேங்க...

0 Comments:

Post a Comment

<< Home