tholaiththavan

Thursday, November 27, 2008

தேங்க்ஸ் கிவ்விங் 2008

நவம்பர் மாச கடைசி வாரம். தேங்க்ஸ் கிவ்விங் வாரம்... 4 நாளு ஆபிஸுக்கு லீவு... காலையில வேகமா எழுந்து முதல்ல கே மார்ட்டுக்கு நான், மீனாட்சி, பேட்ரிக் உலகா, சீனியும் போனோம். ஒண்ணும் பெரிசா பர்சேஷ் பண்ணல. டீல்ஸ் பேப்பரை வாங்கிட்டு வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் பார்த்தோம். அப்புறம் எல்லாரும் எங்க வீட்டுல மதியம் 3 மணிக்கு வர்றோம்ன்னு மீனாட்ச்சியும், உல்காவும் வீட்டுக்கு போயிட்டாங்க.

4 மணிக்கு எல்லாம் மக்கள் எல்லாம் கேதர் ஆக ஆரம்பிச்சிடாங்க. எக்கானமி கிரைசினால இந்த வருசம் டீல்ஸ் எல்லாம் பெரிசா இல்ல, இருந்தாலும் டெரிடிசனல விடக்கூடாதுல்ல. தேங்க்ஸ் கிவ்விங்ல பொருட்களை வாங்குறத விட பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து அடிக்கிற லுட்டியே இருக்கே ஜாலியோ... ஜாலி...

போன வருசம் எல்லாம். முத நாள் சாயங்காலமே பெஸ்ட் பய்ல நின்னோம். ஆன இந்த வருசம் நைட் 2 மணி வரைக்கும் மீனாட்சி, உலகா, பேட்ரிக், சீனி ஜெயபாலன், சீனி கோபிநாதன், பாலாஜி, ரமணா, மனோ, அருள், பெரியப்பு இப்ராகிம், சுவாமி, நானும் சேர்ந்து ஒரே அரட்டை தான்.

சுவாமி 2:15க்கு எல்லாரும் கடைக்கு போகலாம்ப்பன்னு கிளப்பினான். அனைவரும் பெஸ்ட் பய் லையன்ல நின்னு 7 லேப் டாப் கூப்பன் வான்கினோம். அடுத்து நேர ஆபீஸ் டிப்போ போனோம்.மக்களை எல்லாத்தையும் நிக்க சொல்லிட்டு நாங்க வீட்டுக்கு வந்து பேட்ரிக் போட்டு, சுவாமி பிரட் டோஸ்ட் போட்டு பிரண்ஸ்க்கு கொடுத்தோம். அப்புறம் சுவாமியும், நானும் ரோடியோ சாக்க்கு போனோம்.

போன தேங்க்ஸ் கிவ்விங் மாதிரி பெரிசா எதுவும் வாங்காட்டாலும், இந்த வருசம் தேங்க்ஸ் கிவ்விங் ஜாலியாத்தான் போச்சி...

மகிழ்ச்சியான தருணம்

முன்பதிவில் கூறியது போல் இந்த வருடம் பிறந்த நாள் மிக அர்த்தமுள்ளதாக கொண்டாடப்பட்டது. நண்பன் சுவாமியின் அப்பாவும், அம்மாவும் பட்டுக்கோட்டை அருகே அணைக்கட்டில் கிராமத்தில் உள்ள கருணை இல்லத்திற்க்கு சாயங்காலமே சென்றனர். அவர்கள் குழந்தைகளுக்கு தேவையான உடுத்த உடை, உண்ண உணவு, பால், கேக், அவர்கள் மகிச்சிக்கு பாசி, மணி, நகப்பூச்சை எடுத்து சென்று அங்கு உள்ள குழந்தைகளுக்கு வழங்கினர். அவர்களின் மகிழ்ச்சியை குறிப்பிட வார்த்தை தேடினேன். எனக்கு கிடைக்கவில்லை. அங்கு எடுத்த புகைப்படங்கள் சில இங்கே...

அணைக்கட்டில் உள்ள கருணை இல்ல குழந்தைகள்:

குழந்தைகளுக்கு என்னுடைய பரிசு:
அம்மா குழந்தைகளுக்கு தேவையானவற்றை வழங்கினார்:


தொடர்கிறது...


குழந்தைச்செல்வங்கள்...


கடவுள் வழிபாடு:


உணவு உண்ண நாங்க தயார்...



நகப்பூச்சு நேரம்:
அனைவருக்கும் சுட சுட பால் பரிமாறப்பட்டது:
விடைபெறும் நேரம்... அனைவருக்கும் நன்றி,

முக்கியமாக இந்த நிகழ்ச்சிக்கு தங்களுடைய பொன்னான நேரத்தை இந்த் குழந்தைகளுடன் கழித்த நண்பன் சுவாமியின் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Thursday, November 20, 2008

நம்பியார்- 7 தலைமுறை, 70 ஆண்டுகள்!



நடிக்க வந்து ஐந்து ஆண்டுகளை முடித்து விட்டாலே 'எங்கெங்கோ' போய் விடும் இக்காலத்து நடிகர்களுக்கு மத்தியில், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நடிப்புலகில் தனி இடத்தைப் பிடித்து, தனது இடத்திற்கு அருகில் கூட யாரையும் அண்ட முடியாத அளவுக்கு தனி முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றிருக்கிறார் எம்.என். நம்பியார்.

இந்தியில் பிரான் என்று ஒரு வில்லன் நடிகர் இருந்தார். அவரது இடத்தை இன்னும் எந்த நடிகராலும் நிரப்ப முடியவில்லை. அப்படி ஒரு அபாயகரமான வில்லன். அவரது வசன உச்சரிப்பும், பாடி லாங்குவேஜும் அவ்வளவு அபாரமாக இருக்கும்.

தமிழுக்கும் அப்படி கிடைத்த பயங்கர வில்லன்தான் நம்பியார். அவரை நிஜமாகவே வில்லனாகப் பார்த்தார்களாம் அக்காலத்துப் பெண்கள். அந்த அளவுக்கு அவரது முக பாவனையும், வசன உச்சரிப்பும் படு தத்ரூபமாக இருந்ததுதான் காரணம்.

கிட்டத்தட்ட 70 ஆண்டு கால நீண்ட, நெடிய பயணத்தைக் கொண்டது நம்பியாரின் திரையுலக அனுபவம். 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்ட பழுத்த அனுபவஸ்தர். வி்ல்லத்தனத்தில் மட்டுமல்லாமல், பக்தியிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

கிட்டத்தட்ட 65 ஆண்டு காலம் தொடர்ந்து சபரிமலைக்குப் போய் வந்தவர். இதனால்தான் அவரை குருசாமிகளுக்கெல்லாம் குருசாமி என்று அய்யப்ப பக்தர்கள் புகழ்கிறார்கள், மரியாதை செய்தார்கள்.

அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வில்லன்கள் ஏராளம். அசோகன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ். மனோகர், ஓ.ஏ.கே. தேவர் என பலர். ஆனால் அவர்களுக்கெல்லாம் மகுடமாக, மகா வில்லனாக திகழ்ந்தவர் நம்பியார்.


அவருடைய பெயரை உச்சரித்தாலே ஒரு திகில் ஏற்படும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி மிரள வைத்தவர்.

மஞ்சேரியிலிருந்து ஊட்டிக்கு ..

கேரள மாநிலம் மஞ்சேரியில் பிறன்தவர்தான் நம்பியார். இவருடைய இயற்பெயர் நாராயணன் நம்பியார். ஊர்ப் பெயரையும் சேர்த்து எம்.என். நம்பியார் ஆகி விட்டார்.8 வயதில் ஊட்டியி்ல டீ கடை நடத்தி வந்த தனது அக்காள் கணவரின் வீட்டுக்கு இடம் பெயர்ந்தார் நம்பியார். அங்கு தங்கி பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். 5ம் வகுப்பு வரை படித்தார்.சகோதரியின் குடும்பம் கஷ்டமான நிலையில் இருப்பதைப் பார்த்த அவர் அவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பாமல், 13வது வயதில் சென்னைக்கு வந்தார்.


ஊட்டியலிருந்து நாடகத்திற்கு ..

சென்னைக்கு வந்த நம்பியாருக்கு நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் வந்தது. இதனால், நவாப் ராஜமாணிக்கம் நடத்தி வந்த நாடக கம்பெனியில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் சிறு சிறு வேடம்தான் கிடைத்தது. பின்னர் அந்த நிறுவனத்தின் பக்த ராமதாஸ் நாடகம் திரைப்படமாக உருவாகியது.

1935ம் ஆண்டு அந்த நாடகம் தமிழிலும், இந்தியிலும் திரைப்படமானது. நாடக அனுபவத்தை கருத்தில் கொண்டு நம்பியாருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு ..

இப்படித்தான் சினிமாவுக்கு வந்து சேர்ந்தார் நம்பியார். அவருக்கு முதல் படத்தில் கிடைத்த சம்பளம் ரூ. 40.

சிறு சிறு வேடங்களாக நடிக்கத் தொடங்கிய நம்பியாருக்கு ஆரம்பத்தில் ஹீரோ வேடங்களும் கூட கிடைத்தன. ஆனால் வில்லன் வேடத்தில்தான் அவர் பரிமளித்தார்.இது, எம்.ஜி.ஆருடன் இணைந்த பிறகு பன்மடங்கா பிரகாசிக்கத் தொடங்கியது. எம்.ஜி.ஆர் படத்தில் வில்லனா, கூப்பிடு நம்பியாரை என்று கூப்பிடும் அளவுக்கு இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அமர்க்களமாக அமைந்தது.

இருவரும் இணைந்து நடிக்காத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு இந்த ஹீரோவும் - வில்லனும் இணைந்தே நடித்து வந்தனர்.


சர்வாதிகாரி படத்தில் நம்பியாரின் வி்ல்லத்தனம் வெகுவாகப் பேசப்பட்டது. அவரும், எம்.ஜி.ஆரும் போட்ட கத்திச் சண்டை அப்போது வெகு பிரசித்தம்.தொடர்ந்து தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, விவசாயி, உலகம் சுற்றும் வாலிபன், எங்கள் தங்கம் என இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர்.

வெறுக்க வைத்த வில்லத்தனம் ..

இப்படி தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக - அதி பயங்கர வில்லனாக - தொடர்ந்து நடித்ததால் நம்பியாரை நிஜமாகவே வில்லனாக நினைத்து விட்டனர் அந்தக் காலத்துப் பெண்கள்.

படம் பார்க்கும்போது நம்பியாரை, எம்.ஜி.ஆர். அடிக்கும் காட்சிகளுக்கு அமோக வரவேற்பு இருக்குமாம். அதிலிருந்தே மக்கள் எந்த அளவுக்கு நம்பியாரை பார்த்து பயந்தார்கள், கோபமாக இருந்தார்கள் என்பதை உணரலாம்.

இதைத்தான் பின்னாளில் இயக்குநர் வி.சேகர் தயாரித்த நீங்களும் ஹீரோதான் படத்தி்ல ஒரு காட்சியாகவே வைத்தார். அதில், நம்பியாரும், பி.எஸ்.வீரப்பாவும் ஒரு படப்பிடிப்புக்காக கிராமத்திற்கு வருவார்கள்.



அவர்களுக்கு தங்க வீடு கிடைக்காது. ஒவ்வொரு வீடாக ஏறி, இறங்கி வீடு கேட்பார்கள். ஆனால் இவர்தான் எம்.ஜி.ஆருக்கு எதிராக சதி செய்தவர், எனவே வீடு கிடையாது என்று ஒவ்வொருவரும் கூறுவது போல காட்சி அமைத்திருப்பார்கள்.இப்படி தனது வில்லத்தன நடிப்பால் அந்தக் கேரக்டருக்கே ஒரு தனி முத்திரையை உருவாக்கி விட்டவர் நம்பியார். அவரைத் தவிர வேறு எந்த வில்லன் நடிகருக்கும் இப்படி ஒரு இமேஜ் இதுவரையிலும் அமையவில்லை, இதற்கு முன்பும் அப்படி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இப்படியாக எம்.ஜி.ஆருடன், 75 படங்களில் இணைந்து நடித்துள்ளார் நம்பியார்.

சிவாஜிக்கும் வில்லன் ..

எம்.ஜி.ஆரைப் போலவே, சிவாஜி கணேசனுக்கும் வில்லனாக நடித்தவர் நம்பியார். இருவரும் இணைந்து அம்பிகாபதி, உத்தமபுத்திரன், தில்லானா மோகானாம்பாள், திரிசூலம், சிவந்த மண், லட்சுமி கல்யாணம் என ஏராளமான படங்களில் நடித்தனர். சிவாஜிக்குத் தம்பியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார் நம்பியார்.
அந்தக் காலத்து மும்மூர்த்திகளில் ஒருவரான ஜெமினி கணேசனுடனும் நிறையப் படங்களில் நடித்தவர் நம்பியார்.இந்த மூன்று நடிகர்களின் படங்களிலும் தவறாமல் நம்பியார் இடம் பெறுவது அப்போது வழக்கமாக இருந்தது.

7 தலைமுறையினருடன் ..

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், அடுத்த தலைமுறையான ரஜினி, கமல், விஜயகாந்த், அவர்களுக்கு அடுத்த தலைமுறையான விஜய் உள்ளிட்டோருடன் நடித்த பெருமைக்குரியவர் நம்பியார். மொத்தம் 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்து அவர் சாதனை படைத்துள்ளார். அவரது மொத்த படங்கள் ஆயிரத்தைத் தாண்டும். நடிப்பனுபவமோ 70 ஆண்டுகள்.

வில்லத்தனத்தில் கலக்கிய நம்பியார் பின்னர் குணச்சித்திர வேடங்கள், நகைச்சுவை வேடங்களிலும் அசத்த ஆரம்பித்தார்.தூறல் நின்னு போச்சு படம் மூலம் இப்படி டிராக் மாறிய நம்பியார் காமெடியிலும் கலக்கியவர்.நம்பியாரின் மருமகன் தான் நடிகர் சரத் பாபு ஆவார்.

சபரிமலை அய்யப்பனின் தீவிர பக்தராகவும் மிளிர்ந்தவர். தொடர்ந்து 65 ஆண்டுகள் சபரிமலைக்குப் போய் வந்த சாதனை படைத்தவர். இவரைத்தான் சபரிமலைக்குச் செல்லும் திரையுலகினர் குருசாமியாக ஏற்று செயல்பட்டு வந்தனர்.எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை, நம்பியார் இருமுடி கட்டிச் செல்லும்போது, எம்.ஜி.ஆர். அனுப்பி வைக்கும் மாலைதான், அவருக்கு முதலில் அணிவிக்கப்படுமாம்.

இப்படிப் பழுத்த அய்யப்ப பக்தராக விளங்கி வந்த நம்பியார், அய்யப்பன் கோவிலில் சீசன் தொடங்கியுள்ள இந்த மாதத்தில் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அய்யப்பனின் திருவடிகளையே அவர் சரணடைந்திருப்பதாக அய்யப்ப பக்தர்களும் சிலிர்ப்புடன் கூறுகின்றனர்.


நடிப்பிலும், தனிப்பட்ட நல்ல பழக்க வழக்கங்களிலும், குண நலனிலும் நம்பியாருக்கு இணை யாரும் இல்லை. அவரது இடத்தை அவர் இருந்தபோதும் யாராலும் நிரப்ப முடியவில்லை. இனியும் நிரப்புவது அவ்வளவு சாத்தியமானதாக தெரியவில்லை.

Sunday, November 09, 2008

நன்றிகள் பல...

எனக்கு நேரிலும், தொலைப்பேசியிலும், மின்னஞ்சலிலும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த நாளில் எனக்கு பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள குழந்தைகளுக்கு உதவ தேவையான நடவடிக்கை செய்த நண்பன் சுவாமிக்கும், அவனுடைய அப்பா மற்றும் குடும்பத்தாருக்கும் நன்றிகள் பல...

Thursday, November 06, 2008

நவம்பர் 4 2008

இன்று நண்பன் கார்த்தி மின்னஞ்சலில் அனுப்பிய ஓவியம்...




Tuesday, November 04, 2008

இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்

நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித் துடிப்பை நீ்ங்கள் உணர முடியும்.



என்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் இந்த நாட்டுக்கு ஆற்றிய கடமைகளை இந்த நேரத்தில் எளிதாக புறம்தள்ளிவிட முடியாது. எனக்கு சரியான போட்டி தந்தாலும் என்னுடன் தனிப்பட்ட முறையில் அன்பையும் பகிர்ந்த அவருக்கு என் நன்றிகள்.

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பிரச்சாரத்தை நாம் நடத்தினோம். இதற்காக கட்சியினருக்கும் எனக்குத் துணை நின்ற அமெரிக்க மக்களுக்கும் நன்றி. இந்த வெற்றி எனக்குரியதல்ல, இது அமெரிக்க மக்களின் வெற்றி.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்ட மாற்றம் வந்துவிட்டது. நமக்கு புதிய உத்வேகமும் பலமும் கிடைத்துள்ளது.



நாம் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நான் உங்களிடம் நேர்மையாக இருப்பேன். மக்களின் குரலைக் கேட்பேன். இந்த வெற்றி அமெரிக்காவுக்கு ஒரு புதிய விடியல்.


அமெரிக்காவின் இனவாதம் குறித்த கேள்விகளுக்கு இந்த வெற்றி ஒரு பாடம். இந்த வெற்றி நாம் உண்மையான 'யுனைடட்' ஸ்டேட்ஸ் தான் என்பதையும் நம் மக்களின் ஒற்றுமையையும் நிரூபித்துவிட்டது என்றார்.



இது தனது சொந்த ஊரான சிகாகோவில் கிராண்ட் பார்க் மைதானத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே ஒபாமா ஆற்றிய உணர்ச்சிகரமான உரை.

இந்த உரையையும், தேர்தல் முடிவையும் நானும், சுவாமியும் அலுவலக பணி முடித்துவிட்டு வந்து சீனி வீட்டில் சாயங்காலத்திலிருந்து இரவு வரை CNNலில் தொடர்ந்து இந்த அமெரிக்காவுக்கான புதிய விடியலை கண்டு/கேட்ட பல கோடி மக்களில் நாங்களும் இணைந்தோம்.

Monday, November 03, 2008

தீபாவளி 2008 கொண்டாட்டம்

தீபாவளி 2008 கொண்டாட்டம்