சந்தோச பயணம் - 3
'அ' சொல்லி கொடுக்கிறதுல இருந்து நல்ல நண்பர்களை அடையாளம் காட்டி, குழந்தைக்கே உரிய வெகுளிதணமும், கள்ளம் கபடம் இல்லாமல், ஒரு கவலையும் இல்லாமல் வாழ்ந்து, என்னை வளர்த்து தான் தேவாங்கர் நடு நிலை, மேல் நிலை பள்ளிகள்.
நான் schoolக்கு போயி பல வருசம் ஆச்சி. இந்த முறை கண்டிப்பா schoolக்கு உள்ளே போகணும்னு leave நாளான சனிகிழமை நானும், என் friend சரவணனும் போணோம். நான் படிக்கும் போது(1993,1994) எனக்கு கணக்கு பாடம் எடுத்த திரு.ராதா கிருஷ்ணன் தான் இப்போ எங்க school தலைமை ஆசிரியர். அவர் பசங்களுக்கு class எடுத்துகிட்டு இருந்தார். அவரிடம் பேசி classஐ தொந்தரவு பண்ண வேணாம்ன்னு நான் படித்த ஒவ்வொரு வகுப்பறைதேடி என் கால்கள் நடந்தன.
8வது வகுப்பறைஐ பார்க்கும் போது கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லமல் வகுப்பறை வாசலில் முட்டி போட்டது, பசங்களோடு சேர்ந்து போட்ட ஆட்டம் எல்லாம் என் ஞாபகம் வந்தது.
வீட்டுக்கு கிளம்பும் போது எத்தனையோ மாணவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தி விட்டு பிரமாண்டமாய் நிற்கும் என் பள்ளிகூடத்தை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்தேன்.
இதயம் கனத்தது....
கண்கள் ஆனந்தத்தில் பனித்தது....
எங்க School Ground:
நான் படித்த 8ம் வகுப்பு:
School வாசலில் விளையாடிகொண்டு இருந்த பசங்க: