ஏனோ?
இரண்டு வருடம்...
ஆம் அப்பா
இன்றோடு நீங்கள்
எங்களை விட்டு பிரிந்து
இரண்டு ஆகிறது.
எங்கள் வாழ்க்கையும்
அச்சாணி இல்லாத
தேரைப்போல
உங்கள் நினைவு என்ற
உந்து சக்தியால்
ஒடிக்கொண்டு இருக்கிறது.
அறுவடைக்கு
காத்திருக்கும் போது
புயல் வந்தது போலத்தான்
என்னுடய நிலையும்...
உழைப்பு மட்டுமே செய்து வந்த
உங்களுக்கு ஒய்வு கொடுக்க
நான் நினைக்க...
ஆண்டவண் உங்களுக்கு
நிரந்தர ஒய்வு கொடுத்ததேனோ?
0 Comments:
Post a Comment
<< Home