இடைவெளி
வெவ்வேறு வயதில் எப்படி மகனும்/மகளும் தன் தந்தையை பற்றி நினைக்கிறார்கள்?
ஏதாவது தவறு இருந்தால், மன்னிக்க...
4 வயதில் - எங்கப்பா Great தெரியும்ல.
6 வயதில் - எங்கப்பாவுக்கு எல்லாம் தெரியும் டா.
10 வயதில் - எங்கப்பா நல்லவரு. ஆனா கொஞ்சம் கோவபடுறாரு.
12 வயதில் - எங்கப்பா ரெம்ப பாசமா இருந்தாரு எப்போ நான் சின்ன
புள்ளையா இருக்கும் போது.
14 வயதில் - எங்கப்பாவை வரவர புரிஞ்சிக்கவே முடியலயே?.
16 வயதில் - எங்கப்பாவுக்கு புதுசு எதுவுமே புரிய மாட்டேன்கிறதே.
18 வயதில் - எங்கப்பாவோட தொல்லை தாங்க முடியலப்பா.
20 வயதில் - அய்யயோ... இவரோட நம்மாள ஒரு நாளே இருக்க
முடியலயே? எப்படி இத்தனை வருசமா அம்ம இவரோட
இருக்காங்க?
25 வயதில் - அப்பா ஏன் எல்லாத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்?
30 வயதில் - என் பையனை பாத்துகிறது இவ்வளவு கஷ்டமா
இருக்கே. நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது என்னை
பாத்துகிறதுக்கு என் அப்பாவை இவ்வளவு கஷ்டபடுத்தி
இருப்பேனா?
40 வயதில் - நான் என்ன தப்பு பண்ணினாலும், அப்பா என்னை நல்ல
ஒழுக்கதோட தான் வளர்த்து இருக்காரு.
45 வயதில் - நான் யோசிக்கிறேன்? நம்மள எப்படி இந்த அளவுக்கு
உயர்த்தினார்?
50 வயதில் - ஹும்.. நம்மாள ஒரு பிள்ளையவே பார்த்துக்க முடியலயே
எப்படி நம்ம அப்பா என் தங்கச்சி/அக்காவை எல்லாம்
பார்த்து வளர்த்தார்.
55 வயதில் - எங்கப்பா. நல்லா யோசிச்சி எங்களுக்காக நிறைய பண்ணி
இருக்காரு. அவரு ஒரு அறிவாளிய்யா..
60 வயதில் - எங்கப்பா Great தெரியும்ல.
அப்பாவை பற்றி புரிந்து உண்மையை அறிய நமக்கு 56 வருட இடைவெளி தேவைபடுகிறது....