tholaiththavan

Sunday, February 05, 2006

பொங்கல் விழா கொண்டாட்டம் - 2006



ஏன்னடா இவன் பொங்கல் முடிந்து 20 நாளுக்கு அப்புறம் அதை பத்தி எழுதுறானேன்னு பார்க்கிறீங்களா... கொஞ்சம் வேலை அதான் இந்த இடைவெளி. சரி... விசயத்துக்கு வருவோம்.

தமிழர்களின் தனிப்பெரும் விழாவான பொங்கல் விழாவை Little Rockல இருக்கிற Highland Valley United Methodist Churchல Jan 15 2006 அன்று கொண்டாடிணோம். Function மகா நதி படத்தில் இருந்து "பொங்கலோ பொங்கல்" பாட்டில் இருந்து ஆரம்பம் ஆனது.

பாலாஜி பையன் ஒரு இங்லிஷ் பாட்டு, பாலு அண்ணன் பொண்ணு சயோனிகா ஒரு தமிழ் பாட்டு, நிவேதிதா+ வேதுவும் சேர்ந்து "ரண்டக்க ரண்டக்க" பாட்டுக்கு டான்ஸ், மிராக்குலின்+ராகுல்+அவினாஸும் சேர்ந்து சச்சின் படத்துல இருந்து "வாடி வாடி ..." பாட்டுக்கு டான்ஸ், அதித்தி+ஸ்ரீம் சேர்ந்து "சினா தானா" பாட்டுக்கு டான்ஸ், அப்புறம் டாக்டர் உதயும் அவர் பையன் ராஜ்குமாரும் சேர்ந்து கீ போர்டு என குழந்தைகள் கலக்கி விட்டனர்.

இப்போ பெரியவங்க turn...

நிஷா, நமது பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் ஆடினார்.

Little Rock ல் குயில் குரலுக்கு சொந்தகாரரான மீனாட்சி சுந்தரம் "தங்க தாமரை மகளே..." பாடல் பாடினார்.

சிவகாசி படத்துல இருந்து "கோடம்பாக்கம் ஏரியா" பாட்டுக்கு ரம்யா, மஞ்ஜுளா, கோமதியும் சேர்ந்து Little Rock ஏரியாவையே ஆட்டம் காண வைத்தனர்.

பிறகு மீனாட்சி,உலக நாதன், பாலாஜி,டாக்டர் உதய் & கோவிந்தராஜன் ஆகிய 5 familyம் சேர்ந்து 10 mins டான்ஸ் ஆடி நிகழ்ச்சியை களை கட்ட வைத்தார்கள்.

"LAST BUT NOT LEAST...." எங்க ப்ரொக்ரம்க்கு ஒரு Buildup தான்.:)

இது வரை பல நாடகம் நடித்த நாங்கள் இந்த முறை பட்டி மன்றம் நடத்தினோம். தலைப்பு: "மகிழ்ச்சி என்பது திருமணத்திற்கு முன்பா? இல்லை திருமணத்திற்கு பின்பா?. நடுவர்: உலக நாதன். திருமணத்திற்கு பின்பே என்ற அணியில் ராம சந்திரன், நான், சுவாமி நாதன். திருமணத்திற்கு முன்பே என்ற அணியில் இப்ராகிம்,மீனாட்சி, பாலாஜி. இதில் விசேசம் என்னவென்றால் திருமணமாகாத நாங்கள் பின்பே என்றும், திருமணனாவர்கள் முன்பே என்றும் பேசினோம். மிக அருமையாக சென்ற பட்டி மன்றம், பல வாதங்களுக்கு பின் தாய்மார்களின் பேராதரவோடு எங்கள் அணி ஏகோபித்த வெற்றி பெற்றது. இந்த வித்தியாசமான முயற்சி அனைவராலும் பாரட்டபட்டது. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி..

.“போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்ப பொறந்தோமின்னு எண்ணிக்கொள்ளடா”

“தை பொறக்கும் நாளை
விடியும் நல்ல வேளை”... என தலைவர் ரஜினிகாந்த் பாட, நான் பொங்களை அருப்புகோட்டையில் கொண்டாடிய ஞாபகம் என்னை தொட்டு சென்றது....

3 Comments:

Post a Comment

<< Home