tholaiththavan

Tuesday, February 21, 2006

இடைவெளி


வெவ்வேறு வயதில் எப்படி மகனும்/மகளும் தன் தந்தையை பற்றி நினைக்கிறார்கள்?

ஏதாவது தவறு இருந்தால், மன்னிக்க...

4 வயதில் - எங்கப்பா Great தெரியும்ல.

6 வயதில் - எங்கப்பாவுக்கு எல்லாம் தெரியும் டா.
10 வயதில் - எங்கப்பா நல்லவரு. ஆனா கொஞ்சம் கோவபடுறாரு.
12 வயதில் - எங்கப்பா ரெம்ப பாசமா இருந்தாரு எப்போ நான் சின்ன
புள்ளையா இருக்கும் போது.
14 வயதில் - எங்கப்பாவை வரவர புரிஞ்சிக்கவே முடியலயே?.
16 வயதில் - எங்கப்பாவுக்கு புதுசு எதுவுமே புரிய மாட்டேன்கிறதே.
18 வயதில் - எங்கப்பாவோட தொல்லை தாங்க முடியலப்பா.
20 வயதில் - அய்யயோ... இவரோட நம்மாள ஒரு நாளே இருக்க
முடியலயே? எப்படி இத்தனை வருசமா அம்ம இவரோட
இருக்காங்க?
25 வயதில் - அப்பா ஏன் எல்லாத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்?
30 வயதில் - என் பையனை பாத்துகிறது இவ்வளவு கஷ்டமா

இருக்கே. நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது என்னை
பாத்துகிறதுக்கு என் அப்பாவை இவ்வளவு கஷ்டபடுத்தி
இருப்பேனா?
40 வயதில் - நான் என்ன தப்பு பண்ணினாலும், அப்பா என்னை நல்ல

ஒழுக்கதோட தான் வளர்த்து இருக்காரு.
45 வயதில் - நான் யோசிக்கிறேன்? நம்மள எப்படி இந்த அளவுக்கு

உயர்த்தினார்?
50 வயதில் - ஹும்.. நம்மாள ஒரு பிள்ளையவே பார்த்துக்க முடியலயே

எப்படி நம்ம அப்பா என் தங்கச்சி/அக்காவை எல்லாம்
பார்த்து வளர்த்தார்.
55 வயதில் - எங்கப்பா. நல்லா யோசிச்சி எங்களுக்காக நிறைய பண்ணி
இருக்காரு. அவரு ஒரு அறிவாளிய்யா..

60 வயதில் - எங்கப்பா Great தெரியும்ல.

அப்பாவை பற்றி புரிந்து உண்மையை அறிய நமக்கு 56 வருட இடைவெளி தேவைபடுகிறது....

7 Comments:

  • This happens in life. When you realize, it must be too late.

    By Blogger Karthi Permanathan, at 2/22/2006 3:54 AM  

  • We wont accept the fact. That is life.

    Even though we know what we are doing is wrong, we will do that because we only know it is wrong but not experinced with that.

    Keep blogging

    By Blogger சுவாமி - Swami, at 2/23/2006 7:19 AM  

  • 56 aru varudam ellam illai sir..
    eppothu namma koodave irukkara naala.. we take our Appa/ Amma for granted.. pathi perukku avanga birthday kooda nyabagam irukarthu illa..

    ellatha pothu than namma sila vishayangaloda arumai ellam arigirom..

    hostel la irunthavangalukku amma vin saapaadoda arumai poriyum..

    Thavamai Thavam irunthathu parthngala.. athai paartha verum 3 hrs la ella pasangalum marividuvaargal...

    By Blogger vishy, at 2/23/2006 2:39 PM  

  • பில்லா,அம்மு,சுவாமி நீங்கள் சொல்லுறது சரி தான்.அனுபவித்த பிறகு தான் நமக்கு எல்லாம் புரியும்.

    அப்படி புரியும் போது நம் பையனோ,பெண்ணோ நம்மை பற்றி நாம் நினைத்ததை அவர்கள் நினைத்து கொண்டு இருப்பார்கள்...

    இது தான் வாழ்கை...

    By Blogger tholaiththavan, at 2/23/2006 6:00 PM  

  • ரெம்ப கரெட்டா சொன்னிங்க vishy. நம்மள்ள பாதி பேருக்கு மேல அவங்க அப்பா/அம்மா Birthdayக்கூட தெரியறது இல்லை.

    இல்லாத போது தான் அதன் அருமை புரியும்.

    தவமாய் தவமிருந்து படத்தை கண்ணீரோடு தான் பார்தேன்.
    அவ்வளவு அருமையாக வாழ்ந்து காட்டிய படம் இல்லை நமக்கும் ஒரு பாடம்.

    By Blogger tholaiththavan, at 2/23/2006 6:13 PM  

  • Good one.

    BTB, why u have not registered ur blog in http://www.thamizmanam.com ? If not so, pl. make it.

    By Blogger ஜெ. ராம்கி, at 3/07/2006 3:51 AM  

  • Good post. Liked it.

    Father, a wonderful relationship. If mother is a open book, father is a closed treasure.

    By Blogger Lakshman, at 4/12/2006 9:34 AM  

Post a Comment

<< Home