tholaiththavan

Sunday, December 20, 2009

கிருஸ்மஸ் விழா கொண்டாட்டம் 2009 - III

சுரேஷ் தங்கராஜ் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார். திருமதி. கீதா பேட்ரிக் நிறைவு ஜெபம் செய்து விழாவை நிறைவு செய்தார்.

பின்னர் பாடல் குழுவினர் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து பாடல் பாடினர். தொடர்ந்து நான் (ராஜ்குமார் ராஜேந்திரன்) கிறிஸ்மஸ் தாத்தாவாக வந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தேன்.

இந்தியபாரம்பரிய விருந்துடன் விழா இனிதே நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை எபி யேசுநேசதாஸ், சரத் கம்பதுல்லா, மகிழ் இராஜேந்திரன், சுரேஷ் தங்கராஜ், பேட்ரிக் தும்மா, சாலோமன் வேதபிரகாஷ், கென் பென்சன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தினர்.

கிருஸ்மஸ் விழா கொண்டாட்டம் 2009 - II

தொடர்ந்து பாடல் குழுவினர் மூன்று கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடி விழாவிற்கு உற்சாகம் சேர்த்தது.

சிறுவர் பாடல் குழுவினர் இரண்டு கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடி அனைவரது கரகோசங்களையும் பெற்றனர். லில்லி மலர், சந்தியா மற்றும் பார்பரா ஆகியோர் வேதாகமத்திலிருந்து கிறிஸ்துபிறப்பு பகுதியை வாசித்து சிறப்பித்தனர்.

ஆஸ்பரி யுனைட்டட் மெதடிஸ்ட் சபையின் மூத்த போதகர் டாக்டர்.ப்ரையன் பின்க் கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வழங்கினார். கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியை சிறுவர்கள் நாடகமாக நடித்து அனைவரது பாராட்டுதலையும் கைத்தட்டலையும் பெற்றார்கள். எபி யேசுநேசதாஸ் சிறப்பு விருந்தினருக்கு பரிசு வழங்கி கெளரவித்தார்.


- கொண்டாட்டம் தொடரும்...

கிருஸ்மஸ் விழா கொண்டாட்டம் 2009 - I

லிட்டில்ராக்: அமெரிக்காவில் அர்கன்சாஸ் மாநிலத்தின் தலைநகரான லிட்டில்ராக் நகரில் லிட்டில்ராக் இந்தியன் கிறிஸ்தவ ஐக்கியம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. மாலை 6 மணிக்குஉற்சாகமாக விழா துவங்கியது.

டாக்டர்.மகிழ் இராஜேந்திரன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். டாக்டர்.ஜேசுராஜா ஜெபம் செய்து விழாவைத் துவக்கிவைத்தார். தொடர்ந்து ஒரு சிறப்பு பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். செல்வி.ரக்சனா கிறிஸ்தவ பாடல் ஒன்றிற்கு அருமையாகவும் புதுமையாகவும் பரதநாட்டியம் ஆடி அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டார்.

- கொண்டாட்டம் தொடரும்...