ஏனிந்த தண்டணை...
கடவுளே!!!
நத்தை போல அமைதியாகசென்று கொண்டு இருந்த எங்கள் குடும்பத்தின் மேல்ஏன் உனக்கு இவ்வளவு கோபம்?வழக்கு நடத்தாமலேயே தண்டனையாக ஏன்எங்கள் கூட்டை உடைத்தாய்?
நாங்கள் தான் எந்த தவறும் செய்யவில்லையே!!!
மனிதர்கள் தவறு செய்தால் நீ தண்டணை தருவாய்....நீ செய்த தவறுக்கு உனக்கு யார் தண்டனை தருவார்கள்? - கூடு இழந்த நத்தை...
ஏன்?
இதயம் நொருங்கி விட்டது அப்பா...உங்கள் மரணம் பற்றி கேட்ட நொடியிலிருந்து.என் இதயம் நொருங்கி விட்டது அப்பா...
இனி என்றும் பேசமுடியாது அப்பா...அய்ய்யோ!!!! இனி என்றுமே பேசமுடியாதே அப்பா....எனக்கு,அம்மா,தங்கைக்கும் ஏனிந்த தண்டனை அப்பா...சிறு செலவைக்கூட என்னிடம் கேட்டு செய்த உங்களுக்கு எங்களை விட்டு நிரந்தரமாக பிரியபோவதை சொல்லாமல் சென்றதன் நியாயம் என்ன?எனக்காக உங்களையே உருக்கி என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய உங்களுக்கு கடைசி வரை ஒன்றுமே செய்ய அனுமதிக்கவில்லையேஏன் அப்பா?
இடி விழுந்த நாள்...
இன்று இங்கு விழுந்த இடி
இந்த மரத்தில் மட்டும் இல்லை
எங்கள் குடும்பத்தின் மீதும் தான்...