tholaiththavan

Wednesday, May 03, 2006

ஏனிந்த தண்டணை...

கடவுளே!!!

நத்தை போல அமைதியாக

சென்று கொண்டு இருந்த
எங்கள் குடும்பத்தின் மேல்
ஏன் உனக்கு இவ்வளவு கோபம்?

வழக்கு நடத்தாமலேயே
தண்டனையாக ஏன்
எங்கள் கூட்டை
உடைத்தாய்?

நாங்கள் தான் எந்த தவறும்
செய்யவில்லையே!!!

மனிதர்கள் தவறு செய்தால்
நீ தண்டணை தருவாய்....

நீ செய்த தவறுக்கு
உனக்கு யார் தண்டனை தருவார்கள்?

- கூடு இழந்த நத்தை...

1 Comments:

  • "மனிதர்கள் தவறு செய்தால்
    நீ தண்டணை தருவாய்....
    நீ செய்த தவறுக்கு
    உனக்கு யார் தண்டனை தருவார்கள்?"

    கவிதை நல்லா இருக்குங்க,
    யாரு சொன்னா கூடில்லைன்னு கூடநீங்கமாறுறதுதானே

    By Blogger சுதேசன், at 7/12/2006 4:06 AM  

Post a Comment

<< Home