tholaiththavan

Wednesday, May 03, 2006

ஏன்?

இதயம் நொருங்கி விட்டது அப்பா...
உங்கள் மரணம் பற்றி கேட்ட நொடியிலிருந்து.
என் இதயம் நொருங்கி விட்டது அப்பா...
இனி என்றும் பேசமுடியாது அப்பா...

அய்ய்யோ!!!! இனி என்றுமே பேசமுடியாதே அப்பா....
எனக்கு,அம்மா,தங்கைக்கும் ஏனிந்த தண்டனை அப்பா...

சிறு செலவைக்கூட
என்னிடம் கேட்டு செய்த
உங்களுக்கு எங்களை விட்டு
நிரந்தரமாக பிரியபோவதை
சொல்லாமல் சென்றதன் நியாயம் என்ன?

எனக்காக உங்களையே உருக்கி
என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய
உங்களுக்கு கடைசி வரை
ஒன்றுமே செய்ய அனுமதிக்கவில்லையே
ஏன் அப்பா?

0 Comments:

Post a Comment

<< Home