Sunday, April 26, 2009
Tuesday, April 21, 2009
முதல் நிகழ்ச்சி(நிதி நிரட்டும் இசை மாலை)...


நம் நணபர்கள் அனைவரும் இந்த கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். நானும், சத்யாவும் இந்த ஒரு நல்ல காரணத்திற்க்கு நடைபெறும் நிகழ்ச்சியை எங்களுடைய முதல் நிகழ்ச்சியாக சேர்ந்து பார்ப்பதில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டோம். அதே போல் நம் நண்பர்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

இந்த இசை மற்றும் நடன கச்சேரி. அனைத்து இந்திய மாநில நடனம், நாட்டியம், பாடல் இடம் பெற்ற நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது. 3 மணி நேரம் போனதே தெரியவில்லை. நன்றி மீனாட்சி இந்த வாய்ப்பை அளித்ததுக்கு.
Tuesday, April 14, 2009
முதல் சமையல்...
இந்தியாவுல இருந்து வந்ததுல இருந்து புல்லா நம்ம பிரண்ட்ஸ் வீட்டுல தான் சாப்பாடு. சரி, இன்னைக்கி தான் தமிழ் வருசப்பிறப்பாசே.. சத்யா சமையல் முதன் முதலா பண்ணிணாள். சாம்பார், பீன்ஸ் பொரியல், பாயசம் என முதல் நாளே கலக்கிவிட்டாள். நான் எதிர்ப்பார்த்ததை விட சமையல் நன்றாக இருந்தது. இதோ முதல் சமையலின் படம் இங்கே...

Saturday, April 11, 2009
கல்யாணம் முடிச்சிட்டு லிட்டில் ராக்குக்கு வந்தாச்சு...
கல்யாணம் முடிச்சிட்டு இந்தியாவுல இருந்து சந்தோசமா நானும் என் மனைவி சத்யாவும் லிட்டில் ராக்குக்கு நேற்றைய முன் தினம் வியாழக்கிழமை(04-09-2009) இரவு 10:00 மணிக்கு டென்வரில் இருந்து வந்து சேர்ந்தோம். எங்களை வரவேற்க்க திரளாக குடும்பத்துடன் வந்த அனைத்து நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்...
இனி வரும் அடுத்த பதிவுகளில் என்னுடைய இந்திய பயணம், திருமண விழா, அங்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.
இனி வரும் அடுத்த பதிவுகளில் என்னுடைய இந்திய பயணம், திருமண விழா, அங்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.