tholaiththavan

Tuesday, April 21, 2009

முதல் நிகழ்ச்சி(நிதி நிரட்டும் இசை மாலை)...

ஹார்மோனி ஹெல்த் கிளின்க்குகாக ஏப்ரல் 18ம் தேதி மாலை "UAMS – Jack Stephens Spine Institute"ல் மாலை 6:30 மணிக்கு நிதி நிரட்டும் இசை மாலை (பாலிவுட் எக்ஸ்டாவென்ஸா) நடைப்பெற்றது. நல்ல ஒரு காரணத்திற்க்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நம்ம மீனாட்சியும் கஜினி படத்தில் இருந்து இதில் "ஒரு மாலை இளவெயில் நேரம்... அழகான இலை உதிர் காலம்.." பாடல் பாட விழாக்குழுவில் இருந்து அழைப்பு வந்து இருந்து.


நம் நணபர்கள் அனைவரும் இந்த கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். நானும், சத்யாவும் இந்த ஒரு நல்ல காரணத்திற்க்கு நடைபெறும் நிகழ்ச்சியை எங்களுடைய முதல் நிகழ்ச்சியாக சேர்ந்து பார்ப்பதில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டோம். அதே போல் நம் நண்பர்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.



இந்த இசை மற்றும் நடன கச்சேரி. அனைத்து இந்திய மாநில நடனம், நாட்டியம், பாடல் இடம் பெற்ற நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது. 3 மணி நேரம் போனதே தெரியவில்லை. நன்றி மீனாட்சி இந்த வாய்ப்பை அளித்ததுக்கு.

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே...

0 Comments:

Post a Comment

<< Home