tholaiththavan

Friday, February 29, 2008

எழுத்தாளர் சுஜாதா உடல் தகனம்


மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. திரையுலகினர், இலக்கியத் துறையினர், பல்துறையைச் சேர்ந்த பெரும் திரளானோர் சுஜாதாவுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 27ம் தேதி சென்னையில் மரணமடைந்தார் எழுத்தாளர் சுஜாதா. அவரது உடல் தகனம் இன்று சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடந்தது.

சுஜாதாவின் 2வது மகன் இன்று காலை தான் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையின் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த சுஜாதாவின் உடல் அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

அதன் பின்னர் இறுதி ஊர்வலம் கிளம்பியது. இதில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் சுஜாதாவின் உடல் தகனம் செய்யப்பட்டது

Wednesday, February 27, 2008

சுஜாதாவின் மறைவு...



இன்று சாயங்காலம் ஆபீஸில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது நண்பன் சுவாமி போன் செய்து மிகச்சிறந்த எழுத்தாளரும் சினிமா வசனகர்த்தாவுமான சுஜாதா ரங்கராஜன் காலமடைந்த விசயத்தை சொன்னான். மனம் வலித்தது.

அவரின் இழப்பு தமிழனுக்கும் தமிழுக்கும் பேரிழப்பு....

அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Monday, February 25, 2008

படித்ததில் பிடித்தது - 2

நட்பு

சிறகுகள் கிடைத்தவுடன்
பறப்பதல்ல நட்பு . . .


சிலுவை கிடைத்தாலும்
சுமப்பதே நட்பு . . .


தூக்கம்

தற்காலிக தூக்கத்திற்க்காக
ஓர் நிரந்திர தூக்கம்
கொசுவின் கொலை...