tholaiththavan

Sunday, October 26, 2008

தீபாவளி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். துன்ப இருள் நீங்கி இன்ப ஒளி அனைவரின் வாழ்விலும் பரவட்டும்.

மனித நேயம் அனைவரின் மனதிலும் உதயமாகட்டும். உலக மக்கள் அனைவரும் தன் குடும்பத்தோடு சந்தோசமாக வாழட்டும்.

நாளை தலை தீபாவளிக்கொண்டாடும் என் நண்பர்கள் ரவி, பரத் மற்றும் சீனி அனைவருக்கும் உங்கள் வாழ்வில் மென்மேலும் மகிழ்ச்சி பொங்க இந்த தீபாவளி திருநாளில் என் உள்ளங்கனித்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Wednesday, October 15, 2008

கண்ணீர் அஞ்சலி


எங்களை விட்டு
விண்ணுலகம் சென்ற
எங்கள் பாட்டி ராஜம்மாளுக்கு
என்னுடைய மற்றும் குடும்பத்தாரின்
கண்ணீர் அஞ்சலி...

Tuesday, October 14, 2008

:(

அலுவகத்தில் மதிய உணவுக்காக
தயாராகிக்கொண்டு இருந்த நேரம்...
மணி மாமாவிடம் இருந்து
தொலைப்பேசி அழைப்பு.
"பாட்டிக்கு உடம்பு சரியில்லை" என்று
அம்மா,கல்குறிச்சி பாட்டி, தங்கை, ராம்சங்கரும்
அவசரமாக ஊருக்கு கிளம்பிப்போயிருக்கிறார்கள்,
நீ நாளை காலை 9:00 மணிக்கு
தொலைபேசியில் அழைத்து பேசு என்றார்.

சாயங்காலம் அலுவலகப்பணி முடித்து வீடு திரும்பிய பின்
நான் அழைக்கும் முன்
8:24க்கு மறுபடியும் மாமாவிடம் இருந்து
தொலைப்பேசி அழைப்பு...

"பாட்டி தவறி விட்டார்கள்" என்று சொன்னார்.

செய்வதறியாமல் தவித்தேன்.
உடனே தங்கையை தொடர்புக்கொண்டு
தாத்தாவிடம் தொலைப்பேசியை தரச்சென்னேன்.

அவரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல்,
ஆறுதல் கூறி அவரை தேற்ற முயன்று
தோற்று போனேன்.

அம்மா மற்றும் உற்றார், உறவினரிடம்
அவரை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,
மரணதேவன் மீண்டும் ஒரு முறை
அப்பாவிற்க்கு பிறகு எங்கள் குடும்பத்தின்
மற்றொரு ஆணி வேரை
அறுத்து சென்றதை நினைத்து
மனம் நொந்து தூங்கிப்போனேன்.