சந்தோச பயணம் - 1
சொந்த நாட்டை விட்டு வெளி நாட்டுல வேலை பார்கிற ஒவ்வொருவருக்கும் எப்போடா நம்ம ஊருக்கு போவோம். இவ்வளவு நாள் விட்டு பிரிஞ்ச அம்மா, குடும்ப்பத்தார்கள், பிரண்ஸை எப்படா பார்ப்போம்ன்னு காத்துகிட்டு இருக்கிற லட்சோப லட்ச மக்கள்ல நானும் ஒருத்தன்.
அந்த வாய்ப்பு எனக்கு Dec 28 2006ல கிடைத்தது. ஆபிஸ்ல 43 நாட்கள் leave வாங்கிட்டு luftansa flightல கிளம்பினேன். Germay- frankfurtல 4 hrs break. கடிகாரத்தை பார்த்தே நேரத்தை கழித்தேன். flightல முழுவதும் துக்கமே இல்லை. ஊரை பற்றி தான் நினைப்பு.
நடு இரவு 12.30க்கு fligt சென்னைஐ தொட்டது. அம்மா, தங்கை, அவளுடைய மகன் ராம் சங்கர், மாமா, பிரண்ஸ் என ஒரு பட்டாளமே காத்து இருந்தது தெரியாமல், immigration , Baggage checkoutஐ முடித்து கொண்டு வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. 1- 1/2 வருடத்திற்க்கு பிறகு அனைவரையும் பார்கிறேன். அம்மா நல்ல இழைத்து போயிட்டாங்க. ராம் சங்கர் நல்ல வளர்ந்துட்டான். தங்கச்சி, மாமாவுடைய தோற்றமும் மாறித்தான் போச்சி... குடும்பத்தாரிடம் பேசிட்டு திரும்பி பார்த்தால் பிரண்ஸ் கூட்டமே இருந்தது. சென்னை, பெங்களுர்ல இருந்து எல்லாரும் வந்து இருந்தாங்க. வழக்கம்போல airport லே ஜாலிகச்சேரியை ஆரம்பித்தோம்.
நேரம் 1.30ஐ கடந்த்தால் நாளைக்கு பார்போம்டாண்ணு சொல்லிட்டு, என் குடும்பத்தாருடன் airportல் இருந்து calltaxiல வீட்டுக்கு என்னுடைய சந்தோச பயணம் தொடங்கியது.