tholaiththavan

Monday, January 02, 2006

விர்ஜினிய பயணம் 2005 - கிறிஸ்துமஸ் ஹாலிடே



நடுங்கும் குளிரில் அதிகாலை 5.00 மணிக்கு எழுந்து ராஜ் சுந்தரின் உதவியுடன் லிட்டில் ராக் ஏர்போர்ட் சென்றேன். மெம்பிஸ் வழியாக, விர்ஜினியா சென்று அடையும் போது மணி 11.15.
அன்றய தினம் சதிஷ்டன் பேச்சும், லொல்லு சபா ப்ரொக்ரம்முமாக எங்கள் நேரம் கழிந்தது.

சனிகிழமை பிளான் கூஷ்டனில் இருந்து வரும் மகா தேவனை பிக்கப் செய்து லோக்கலில் சுத்தி பார்பது. அதன் படி, விர்ஜினியா சில்ட்ரன்ஸ் மியுசியம் சென்ட்றோம். சதிஷ் பிரண்ட் மோகணும் எங்களுடன் இணைந்து கொண்டர். இரவு லேட்டாக ஆரம்பித்த(12.15) என்னுடய சமையல் முடியும் போது காலை மணி 3.00. பலன் சிக்கன் பிரை, இறால் பிரை, முட்டை பரோட்டா. லேட்டாக சாப்பிடலும் நல்ல சுவை. :)

25ம் தேதி கிறிஸ்துமஸ் என்பதால், எல்லா கடை, டூரிஸ்டு இடங்களும் லிவ். ஆகவே முழு நாளும் நான், சதிஷ், மகா முவரும் வீட்டிலே கதை பேசி நேரத்தை கடத்தினோம்.

திங்கட்கிழமை காலை வேகமாக எழுந்து கிளம்பி, வாசிங்டன் DC சென்றோம். மகாவிற்க்கு யுஎஸ் கேப்பிட்டல் , மோனுமென்ட், வெள்ளை மளிகை என எல்லாம் சுத்தி காண்பித்தோம். ஆனால் குளிர் காற்று மகாவை முழுவதும் என் ஜாய் பண்ண விடாமல் தடுத்தது. சூடாக காபி, எக் ரோல் என வெள்ளை மளிகை முன் இருந்த கடைகளில் சாப்பிட்டோம். சுப்பர் டேஸ்ட்.

பிசினெஸ் ட்ரிப்பாக 1 மாததிற்க்கு முன்னால் அமெரிக்கா வந்து, எங்கும் போகமல் போரடித்து அமெரிக்காவே பிடிக்காமல் போன மகாவிற்க்கு இந்த ட்ரிப் ஒரு ஆறுதல். எனக்கும், சதிஷ்க்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு முவரும் சந்தித்து, சேர்ந்து ஜாலியாக பேசி, ஊர் சுற்றி 3 நாட்களை கழித்த சந்தோசம்.

இதே போல் 2 மாததிற்கு முன் கலிபோர்னியா வந்த சீனியுடன் இதே யுஎஸ் கேப்பிட்டல் , மோனுமென்ட், வெள்ளை மளிகை என எல்லாம் சுத்தி பார்தோம், இப்போ மகாவுடன். எத்தனை முறை சுற்றினாலும் அது பிரண்ஸ்களுடன் சுற்றும் போது அதன் மகிழ்ச்சியே தனி தான்...

0 Comments:

Post a Comment

<< Home