நிம்மதியான வாழ்வைக்கொடு...
என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எதை நம்புவது என்றும் தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் நிகழ்வைப் பற்றி பலவிதமான கருத்துக்கள். ஆம் , நான் தனி ஈழத்திற்க்கு போரடிய பிரபாகரனின் மரணத்தை பற்றி தான் செல்கிறேன்.
அவர் இறந்து விட்டார் என்றும், இல்லை என்றும் பல செய்திகள். இது உண்மையாக இருந்தால் தமிழ் இனத்திற்க்காக போராடிய அவருக்கு வீரவணக்கங்கள். ஒரு நல்ல தமிழனை இனம் இழந்து விட்டது. பிரபாகரன் மரணம் அடையலாம், ஆனால் அவர் தமிழரின் உரிமைக்காக நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்க்கும். கடந்த 30 வருடங்களாக,தங்கள் உரிமைக்காக போராடி தன் இன்னுயிரை நீத்த அனைத்து மக்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலி.
நான் இறைவனிடம் வேண்டுவது எல்லாம், இறைவா! என் இன தமிழருக்கு நல்ல எதிர்காலத்தை கொடு.... பட்ட துன்பம் போதும்.... சொந்த நாட்டிலே அகதியாக வாழும் நிலையை மாற்று... அனைவருக்கும் நிம்மதியான, சம உரிமையோடு வாமும் வாழ்வைக்கொடு...
0 Comments:
Post a Comment
<< Home