tholaiththavan

Sunday, May 03, 2009

அப்பாவுக்கு சாமி கும்பிட்டோம்...

அப்பா எங்களை விட்டு பிரிந்து இன்றோடு நான்காம் ஆண்டுகள் ஆகிறது. காலையிலே எழுந்து குளித்து நேரா கிளம்பி ரோட்ணி பரம்ல இருக்கிற குரோகர்க்கு போனேன். அங்கே அப்பா பூஜைக்கு தேவையான பூங்கொத்தை வாங்கிக்கொண்டு வந்தேன். சத்யா அதை மாலையாக கட்டினாள். காலை 10:30 மணிக்கு மேல் அப்பாவின் படத்தை எடுத்து நன்றாக துடைத்து புதிதாக திருநீறு, குங்குமம் இட்டு மாலை போட்டு அப்பாவை வணங்கிணோம். பிறகு சத்யா மதிய உணவு தயார் செய்ய ஆரம்பித்தாள். சாப்பாடு, சாம்பார், ரசம், முட்டைகோஸ் பொரியல், உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம், பாயாசம் என உணவு தயாரானவுடன், எதிர் வீட்டு சீனி, சுஜாதா குடும்பத்துடன் உணவு உண்டோம். கடந்த வருட பூஜையில் அம்மா எல்லாவற்றையும் முன்னால் இருந்து செய்தார்கள். பூஜை முடிந்த பிறகு அம்மாவுக்கு போன் செய்து பேசினோம்.

0 Comments:

Post a Comment

<< Home