tholaiththavan

Tuesday, May 12, 2009

ரிசப்சனுக்கு ரெடியாகிட்டு இருக்கோம்...

இது எங்களுக்கு ஒரு பிஸியான வாரம். ஆமாங்க, சத்யாவும், நானும் மும்முரமாக எங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறோம். போன ஞாயித்து கிழமை உலகா குடும்பத்தாரும், ஆனி, சத்யா, நானும் சேர்ந்து டில்லட்ஸுக்கு போயி சத்யாவுக்கு தேவையான, மேக்கப் செக்கப்பும் பிறகு, கிட்சை வாங்கினோம்.

அப்புறம் நேரா ப்ர்லிங்க்டன், வால்மார்ட், பார்ட்டி சிட்டி கடைக்கு போயி ரிசப்சனுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்க்கு வர மதியம் 3:30 ஆனது. ரம்யா குடுத்த பிரியாணியை ஆனியும், நாங்களும் சாப்பிட்டோம்.
அதுக்கு அப்புறம் ரிசப்சன் ஈவைட் அனுப்புறதுக்கு தயாராகி, எல்லா இன்பர்மேசனும் ரெடி செஞ்சி ஈவைட் அனுப்ப பகல் 2:30 ஆனது. யாப்பா.. துக்கம் கண்ண கட்டுதே...
அப்புறம் நேத்து (திங்கட்கிழமை) சாப்பாடு விசயமா சுஜாதா, மேகலாகிட்ட பேசினோம். மெனுல என்ன கடையில ஆர்டர் பண்ணனும் முடிவும் பண்ணிணோம்.

இன்னைக்கு மதியம் உலகா, சீனி, நானும் மிக்கீஸில் ரிசப்சனுக்கு தேவையான கேக்கை நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஆர்டர் செய்தோம். ஒரே பிஸி தான் போங்க... இன்னும் நடுவுல 3 நாளு தான் இருக்கு. நண்பர்கள் உதவியோட நல்ல படியா பங்சன் நடக்கும்ன்னு நம்பிக்கையோட மே 16ம் தேதியை நெருங்கிட்டு இருக்கோம்...

0 Comments:

Post a Comment

<< Home