tholaiththavan

Tuesday, October 16, 2007

டூரிங் டாக்கீஸ்...


நேற்று இரவு இயக்குனர் திரு சேரன் தன் வாழ்நாளில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்த "டூரிங் டாக்கீஸ்" யை படித்து முடித்தேன். ஒவ்வொரு அத்தியாயத்தையயும் படித்து முடிக்கும் போது என்னையும் அறியாமல் என் கண்ணீர் துளி வெளியே வந்து உலகத்தை எட்டி பார்த்தது.

தன் வாழ்நாளில் பட்ட கஷ்டங்களை அவர் எழுத்தாக்கியதை படித்த பின் என் வார்த்தைகளால் விவரித்து விடலாம் என்று முயற்சி செய்து தேற்று விட்டேன்.

இந்த புத்தகத்தின் சில வரிகளில் என்னையே நான் பார்த்தேன். நன்றி சேரன் அவர்களே.

டூரிங் டாக்கீஸின் முன்னுரையில் இருந்து சில வரிகள்...

"எங்கோ புழுதிக்காட்டில் வறுமைக்கு வாக்கபட்டு ஐந்தாறு பிள்ளைகள் பெற்று அத்தனையையும் அன்பின் சும்மாடுக்குள் தூக்கிச் சுமந்து வளர்த்தெடுக்கிற தாய்களைவிட நாம் என்ன சாதித்துவிட முடியும். உறவுகளை உயிருக்குள் சுமந்து திரிந்து வெந்து தணியாத ஆசைகளுடன் செத்துப்போகிற தகப்பன்களைவிட என்ன வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்?"

பறப்பதற்காக பறவைகள் கர்வம் அடைந்தால் சிறகுகளே சிரிக்கும். ஆகவே, எனக்கான இந்த கூட்டைக் கட்டிக்கொள்ள சுள்ளி பொறுக்கித் தந்த நல்லவர்களுக்கான நன்றி மட்டுமே எப்போதும் நெஞ்சில் உண்டு!..."

இந்த அருமையான படைப்பை உருவாக்கிய அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றிகள்.

0 Comments:

Post a Comment

<< Home