Vollyball Tournamentல நாங்க...
லிட்டில் ராக்ல வருசா வருசம் Vollyball Tournament நடக்குறது வழக்கமுங்க. இந்த வருசமும் நேத்தைக்கி மேட்ச் நடந்துச்சி. இந்த தடவை மேட்ச்க்கு Convey, Russellville அப்புறம் நம்ம ஊர்ல இருந்து மொத்தம் 14 டீம் கலந்துட்டாங்க. எல்லாரும் அவங்களோட familyயோட வந்து இருந்தாங்க. இயத்திரமான வாழ்க்கைக்கு வாக்க பட்டு போன இந்த ஊர்ல அப்ப அப்ப நடக்குற gathering, அப்புறம் இந்த மாதிரி நடக்குற Tournamentம் தாங்க எங்க சந்தோசத்துக்கு வடிகால்.
எங்க டீம்ல இருந்து சுவாமி, மகிழ் ,பேட்ரிக், மீனாட்சி, சுரேஷ், உலகநாதன் , குமார் விளையாடுணாங்க. எப்படி 10வது, 12வது exam எழுத போற students டென்ஷ்னா இருப்பாங்களோ... அந்த மாதிரி நம்ம பசங்க இருந்தாங்க. நம்ம மீனாட்சி நைட் எல்லாம் துங்காம strategy plan போட்டு இருந்து இருக்காரு.
லீக் 4 மேட்ச்லயும் ஒரு கேம்க்கூட தோக்காம ஜெயிச்சதால எங்க டீம் நேரா செமி பைனலுக்கு போயிட்டோம்.
நாங்க ஆடும் போது எங்க கேமை பார்க்க பெரிய கூட்டமே சேரும். அதிலும் மகிழின் ஆட்டத்தை பத்தி சொல்லவே தேவை இல்லை.
செமி பைனல்ல Russellville டீமையும் தொடர்ந்து 2 கோம்ல ஜெயிச்சி பைனலுக்கு போனோம். இந்த இடத்துல நம்ம தலைவரு படத்துல இருந்து ஒரு பாட்டு நம்ம பசங்களுக்குகாக...
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு...
பைனல்ல நாங்க ஆட போற டீமும் லிட்டில் ராக் தான். காலையில இருந்து ஆடின டையர்டோ என்னமோ சரியா ஆட முடியாம போச்சி. அதே சமயத்துல எதிரணியும் நல்லா ஆடி வின் பண்ணினாங்க. Runners Cup எங்களுக்கு...
நாங்க தோத்ததை பத்தி நினைச்சிக்கிட்டு இருக்கும் போது எனக்கு டைரக்டர் சேரன் சொன்னது என் ஞாபகத்துக்கு வந்தது. " வெற்றி மட்டுமே வாழ்க்கை அல்ல. அது ஒர் அங்கீகாரம் - ஒர் அடையாளம் அவ்வளவே. "
நாம்ம மகிழ்க்கு MVP மெடல் குடுத்தாங்க. எங்களுக்கு இன்ப அதிர்ச்சி.
அப்புறம் இந்த ப்ளாக்கை முடிக்கிறதுக்கு முன்னாடி எங்க டீம் மேனேஜர்யை பத்தி சொல்ல மறந்துடேங்க. முதல் மேனேஜர் நம்ம சீனிவாசன் ஜெயபாலன். காலையில இருந்து நடக்கிற எல்லா மேட்சையும் camcorderல எடுத்தாரு. அப்புறம் நான் தாங்க ( தெரியும்டா. இவ்வளவு buildup தரும்போது...) எல்லா மேட்சையும் , prize dirtribution, அப்புறம் அவ்வப்போது நடந்த நிகழ்வுகளை என் கேமேராவில் உள் வாங்கி மெம்மரி கார்டின் அளவை குறைச்சிக்கிட்டு இருந்தேன்.
சந்தோமான சந்திப்பை மெய்மையாக்கிய அனைவருக்கும் எங்கள் அணியின் நன்றிகள்.
0 Comments:
Post a Comment
<< Home