tholaiththavan

Sunday, December 14, 2008

மகிழ்ச்சி(இசை)யான வாரம்

ரெம்ப நாளாவே டாலஸ்ல இருக்குற நம்ம சாமியும், அஜய்யும் அவங்க வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டே இருந்தாங்க. நானும், சுவாமியும் ஆபீஸ்ல பிசியா இருந்தல(அட.. நெசமாதாங்க) போகவே முடியல.

சரி, இந்த வாரம் போகலாம்ன்னு அலமோல அல்டிமா ரென்டல் காரை புக் பண்ணினோம். வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு ஆபீஸ்ல இருந்து "வாங்கடா வாங்க என் வண்டிக்கு பின்னாலன்னு" நம்ம தலைவர் பாட்டை பாடிகிட்டே(மனசுகுள்ள தாங்க) ஐ30வெஸ்ட்ல காரை ஓட்ட ஆரம்பிச்சேன். 5 1/2 மணி நேர டிரைவுல சில பல சாகசங்களை(?) சந்திச்சி சாமி வீட்டுக்கு போகவே 9:30 மணி ஆயிடுச்சி.

சுவாமி முதல் முறையா இப்பத்தான் சாமி குடும்பத்தை பார்க்கிறான். ரெப்ரஸ் பண்ணிட்டு, சாமியோட வொய்ப் ஹரிணி எங்களுக்காக அடை, மோர் குழம்பும் செஞ்சி இருந்தாங்க. நல்ல ரசிச்சி சாப்பிட்டுட்டு நைட் 1:30 மணி வரைக்கும் உள்ளுர் நடப்புகளை பேசிக்கிட்டு இருந்தோம்.
சனி கிழமை காலையில 9:30 மணிக்கு எழுந்து,குளிச்சிட்டு (கூல் ஆனாலும் குளித்து குடின்னு பெரியவங்க சொன்ன மாதிரி...), சுவாமியும், நானும், சுட சுட இட்லி சாப்பிட்டோம். சாமியோட பையன் சாய் சங்கிரீஷ்க்கூட விளையாடிக்கிட்டு இருந்தோம். அப்ப தான் ஹரிணி நல்ல பாடுவாங்கலேன்னு ஞாபகம் வந்துச்சி. அவங்களை பாடச் சொன்னோம். என்ன பாட்டு வேணும்ன்னு கேட்டு, மதிய சமையல் வேலையை பார்த்துகிட்டே கர்னாடிக், சினிமா பாட்டுன்னு பாடி கலக்கிடாங்க. சும்மா சொல்லக்கூடாது, 2 மணி நேரம் போனதே எங்களுக்கு தெரியல. என்ன ஒரு குரல் வளம்.
சாமி பிரண்ட் கிருஷ்ண பேமிலியையும் சாப்பிட கூப்பிடிருந்தான். ஹரிணி பாட்டுல மட்டுமில்ல சமையல்லையும் வெளுத்து கட்டிட்டாங்க. புது மாபிள்ளைன்னு சொல்லி ஒரே கவனிப்பு. அருமையான அய்யராத்து சாப்பாடு. எல்லாம் சாப்பிட்டுட்டு காரட் ஜூஸ் குடுக்கும் போது "ம்மா, முடியல" இது தான் நாங்க ஹரிணி கிட்ட சொன்னது.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு இல்லையா, நம்ம தொண்டன் சுவாமி போன்ல மெசேஜ் செக் பண்ணுற மாதிரி ரூமுக்கு போனவன் ரெம்ப நேரமவே ஆளை காணோம். என்னடான்னு கெஸ்ட் ரூம் கதவை திறந்து பாத்தா நல்ல முக்காடு போட்டு துங்கிட்டு இருந்தான்.

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் சாமியோட இன்னொரு பிரண்ட் பாலாஜி வீட்டுக்கு போனோம். அவங்க வீட்டுல கொஞ்ச நேரம் டேபில் டென்னிஸ் ஆடினோம். என்னடா, சின்ன புள்ளத்தானமா இருக்குன்னு நீங்க சொல்லுறது எங்களுக்கு கேட்குது. சும்மா ஒரு விளம்பரம் தாங்க. அப்புறம் சில பல பஜ்ஜிகளை சாப்பிட்டுட்டு கிருஷ்ணா வீட்டுக்கு போனோம்.
கிருஷ்ணா 2005ல லிட்டில் ராக் வந்தப்ப, நம்ம சுவாமி சமைச்ச மீன் குழம்பு புடிச்சி போச்சி. சுவாமி இன்னைக்கு நைட் மீன் குழம்பு சமைச்சே ஆகணும் சொன்னாரு. நம்ம சுவாமி தான் அன்புக்கு கட்டுப்பட்டவன் ஆச்சே. அவனோட திறமையை டாலஸ்ல காமிச்சான். மீன் குழம்பு, சிக்கன் குழம்பை முடிச்சிட்டு கருப்பு போர்வீரன் - வவ்வால் மனுசன் திரும்ப வர்றான் (அதாங்க The Dark Knight - Batman returns) படத்தை பாக்கலாம்ன்னு சப்டைட்லை போட்டா வரமாட்டேங்குது. கடைசியில சப்டைட்டில் இல்லாமலேயே பார்த்தோம். ஒரே காமெடி தான் போங்க. நான் படத்தை பத்தி சொல்லலங்க. ஏன்னா படம் முடிஞ்சதுக்கு அப்புறம் ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு கதையை சொன்னங்க. சாமி வீட்டுக்கு வந்துட்டு தூங்குறதுக்கு நைட் 2:30 ஆயிடுச்சி.

எங்க வயித்துக்கு மட்டும் வாயி இருந்தா நல்ல எங்களை திட்டி இருக்கும். அந்த அளவுக்கு நேத்து நைட்டுல இருந்து சாப்பிட்டுட்டு இருக்கோம். ஹரிணிகிட்ட காலையில பிரேக் பாஸ்ட்க்கு எதுவும் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டோம்.

காலையில ஒரு மப்பின், ஒரு கப் பூஸ்ட் சாப்பிட்டுட்டு சாமி, ஹரிணி, சாய், சுவாமி, நானும் அஜய் வீட்டுக்கு கிளம்பினோம். சாமி வீட்டுல இருந்து 45 மினிட்ஸ் டிரைவுல பிரிஸ்கோல அஜய் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

மாயாவோட அப்பா, அம்மா, தங்கை எல்லோரும் இந்தியாவுல இருந்து வந்து இருந்தாங்க. அறிமுகத்துக்கு அப்புறம், எல்லோரும் அஜய்யோட புது வீட்டை சுத்தி பார்த்தோம். மாயாவோட தங்கை ஒரு புரொபசனலா புல்லாங்குழல் வாசிப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கோம். மாயாவும் நல்ல வயலின் வாசிப்பாங்க. ஹரிணியும் ஒரு சிறந்த பாடகி. எல்லாரும் சேர்ந்து ஒரு அருமையான இசை கச்சேரியே நடத்திட்டாங்க. புல்லாங்குழல்ல பாட்டு, கர்னாடிக் பாட்டு, பாரதியார் பாட்டுன்னு எல்லோரும் சேர்ந்து பாடி அமர்களப்படுத்திடாங்க. மாயாவும், அவங்க தங்கையும் சேர்ந்து அவங்க குருவோட பாட்டை பாடினாங்க. மாயாவோட அம்மாவும் ஒரு பாட்டு பாடினாங்க. நாங்க இந்த அருமையான தருணத்தை ஒவ்வொரு நிமிசத்தையும் ரசிச்சி அனுபவிச்சோம்.
1 1/2 மணி நேர கச்சேரிக்கு பிறகு, அருமையான கேரளா சாப்பாடு. இந்த தடவை வயிரே திட்டினாலும் பரவாயில்லைன்னு போட்டு தாக்கிட்டோம். எல்லாம் நம்ம மாயாவோட அம்மா சமையல். அப்புறம் ஒரு குயிக் போட்டோ செஸன். அஜய் குடும்பத்தில எல்லாருக்கும் பை சொல்லிட்டு சாமி வீட்டுக்கு வந்து 10 நிமிசம் பேசிட்டு சாமி, ஹரிணி, சாய்க்கு பை சொல்லிட்டு, அருணை பார்க்க ஒரு சின்ன விசிட்.

மணி 6:20 ஆச்சி. வண்டியை லிட்டில் ராக்கை பாத்து ஓட்ட ஆரம்பிச்சேன். வண்டி ஓட்டும் போது தூங்க கூடாதுன்னு சுவாமி எப்.எம் ரேடியோல வர்ற மாதிரி பாட்டை போட்டு பேசிக்கிட்டே வந்தான். டெக்ஸார்கனா வந்ததே தெரியால. அதுக்கு அப்புறம் அவன் வண்டியை ஓட்ட ஆரம்பிச்சான். பிரண்ட்ஸ் எல்லாத்துக்கும் போன் பண்ணி நாங்க ரிட்டன் வந்துகிட்டு இருகோம்ன்னு சொல்லிகிட்டே வீட்டுக்கு வர 11:30 ஆனது.

மாயாவோட தங்கை ப்ரியாவின் புல்லாங்குழல் கச்சேரி:




மேலும் பார்க்க:

http://www.youtube.com/watch?v=5zSMwM71OFI
http://www.youtube.com/watch?v=uJgapPPxXoE
http://www.youtube.com/watch?v=2z8QJ0lJJtk
http://www.youtube.com/watch?v=839NjlR2Nzw
http://www.youtube.com/watch?v=ubOHYigXYkw
http://www.youtube.com/user/Bansuri007

எங்களை பொருத்த வரைக்கும் இது ரெம்ப சந்தோசமான ட்ரிப். ஏன்னா போன இடத்துல நோ டிவி, நோ சாப்பிங், நோ சைட் சியிங். ஒன்லி எங்க பிரண்ட்ஸ், அவங்க பேமிலியோட ரெம்ப ஜாலியா 2 நாளு போனதே தெரியாம இருந்துட்டு வந்தோம். இதுக்கு பெரிய காரணமா இருந்த சாமி, ஹரிணி, சாய், அஜய், மாயா, ஆதயா, மாயாவோட அப்பா, அம்மா, தங்கை ப்ரியா எல்லோருக்கும் எங்களோட மனமார்ந்த நன்றிகள்.

4 Comments:

Post a Comment

<< Home