tholaiththavan

Sunday, May 11, 2008

மெம்பிஸ் பயணம்...


இந்த வார விடுமுறைக்கு 180 மையில் தொலைவில் உள்ள மெம்பிஸ்க்கு சென்று அங்கு உள்ள நண்பர்கள் திவாகர், பாலா, ஜெயமுருகன் குடும்பத்தாருடன் கோயிலுக்கு போகலாம் என்று அம்மா, நான், பரம் குடும்பத்தாரும் முடிவு செய்தோம்.


அது என்னனே தெரியலங்க... நாம ஏதாவது பிளான் பண்ணும் போது தான் எங்கிருந்தோ வேலை வரும் பாருங்க... திடீருன்னு மீட்டிங் நடக்கும், ஸ்டேட்டஸ் கேப்பாங்க... எல்லாத்தையும் முடிச்சிட்டு சாயங்காலம் 6:30 மணிக்கு கிளம்பிணோம். பரம் வண்டியில் ஏழு பேர் தான் போக முடியும் என்பதால் நான் என்னுடைய காரில் அம்மாவும் நானும் மெம்பிஸுக்கு போனோம்.


பிரண்ட்ஸ் எல்லாரும் எங்களுக்காக சூப்பர் சமையல் செஞ்சி வச்சி வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க... திவாகர் வீட்டுல அருமையான டின்னருக்கு அப்புறம் கொஞ்ச நேரம் காட்ஸ் ஆடிட்டு பரம் பேம்லி பாலா வீட்டிலும், என்னுடைய அம்மாவும், பாரதி அம்மவும் ஜெயமுருகன் வீட்டிலும், நானும், குமாரும் திவாகர் வீட்டில தூங்கினோம்.


காலையில எழுந்திரிச்சி கோயிலுக்கு போனோம். 3 மணி டிரைவுல மெக்டொனால்ட்ஸ் லஞ்சை முடிச்சிட்டு தரிசனத்தை முடிச்சிட்டு நாஷ்வில இருக்கிற கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டோம்.

அந்த ஊர்ல இருக்கிற ஒப்ரி மில்ஸ் ஏரியாவுக்கு போனோம். சாப்பிங் மால், ஐ-மேக்ஸ் தியேட்டர், பெரிய ஹோட்டல்கள் என ஏரியாவே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிஞ்சது...

நாஷ்வில இருந்து மெம்பிஸ் வர்ற வழியில மழைன்னா மழை அப்படி ஒரு மழை... லேனே சுத்தமா தெரியல... முன்னாடி போற கார்ல இருந்த லைட்டை வச்சி அதே வழியில என்னோட காரை ஓட்டிட்டு வந்து சேர்ந்தோம். அம்மா மழையை பார்த்து ரெம்ப பயந்துட்டாங்க... நல்ல வேளை எந்த ஒரு பிரச்சனை இல்லாம வந்து சேர்றதுள்ள அம்மா வேண்டாத தெய்வம் இல்ல...

ட்ரைவ் பண்ணுன டையட்ல வந்த உடனே தூங்கிட்டேன்...

0 Comments:

Post a Comment

<< Home