ஓட்ஸ் கஞ்சியும், கருவாடும்...
அம்மா அமெரிக்கா வந்து 2 1/2 மாதங்கள் ஆகப்போகிறது. அவர் வந்த பிறகு நமக்கு ராஜயோகம் தான். எனக்கும், சாமிக்கும் சமையல் கட்டு பக்கம் வேலையே இல்லை... உங்களுக்கே தெரியும், பேச்சிலர் சமையல் பற்றி. வித விதமான சாப்பாடு அதுவும் அம்மா கையில் என்றால் கேட்கவா வேண்டும். நான் நல்ல வெயிட் போட்டதா என் நண்பர்கள் கூறினார்கள். இன்னும் இந்த பாக்கியம் வரும் 2 1/2 மாதங்கள் தான். அப்புறம் அம்மா ஊருக்கு போயிடுவாங்க.
சரி விசயத்துக்கு வர்றேன். இன்னைக்கு அம்மாவை எதுவும் விசேசமா சமைக்க வேண்டாம்ன்னு செல்லிடேன். அதனால் அம்மா ஓட்ஸ் கஞ்சியும், கருவாடும் செஞ்சி இருந்தாங்க. என்னோட சின்ன வயசுல அம்மா எனக்கு கம்மங்கஞ்சியும் கருவாடும் வச்சி தந்தது ஞாபகம் வந்தது. இத்தனை வருசத்துக்கு அப்புறம் ஒரு அருமையான சாப்பாடு. சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர் போல வருமாங்கிற மாதிரி, என்ன தான் பர்கரும், டேக்கோவும் சாப்பிடாலும் நம்ம ஊரு கஞ்சியும், கருவாடு மாதிரி வருமா?
0 Comments:
Post a Comment
<< Home