tholaiththavan

Thursday, June 12, 2008

செலிடிக்ஸ் vs லேக்கர்ஸ்

கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பேஸ்கட் பால் மேட்ச்சில் ஈஸ்ட்ர்ன் கான்பரன்ஸில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ்ம் வெஸ்டர்ன் கான்பரன்ஸில் பாஸ்டன் செலிடிக்ஸ் வென்று, ஏற்கனவே நடந்த 3 போட்டிகளில் செலிடிக்ஸ் 2 வெற்றியும், லேக்கர்ஸ் 1 வெற்றியும் பெற்று இருந்தது.

இந்த நிலையில் 4வது ஆட்டம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைப்பெற்றது.

என்னவென்று சொல்வது இந்த ஆட்டத்தை பற்றி... முதல் கால் பகுதி 12 நிமிட ஆட்டத்தில் லேக்கர்ஸ் 35 பாயிண்ட், நான் சப்போர்ட் செய்யும் செலிடிக்ஸ் வெறும் 14 பாயிண்ட் தான். அரையிருதி(24 நிமிட ஆட்டத்திற்க்கு) பிறகு லேக்கர்ஸ் 58, செலிடிக்ஸ் 40 பாயிண்ட்.

கூடைபந்து போட்டி வரலாற்றில் இவ்வளவு வித்தியாசதில் இருந்தால் கேம் அவ்வளவு தான். என்னடா இது பாஸ்டன் சொதப்புராங்களேன்ணு நினைக்கும் போது இந்த டீமை சேர்ந்த பிக் 3 என்று வர்ணிக்கப்படும் பால் பியர்ஸ், ரே ஆலன் மற்றும் கெவின் கார்னட் சிறப்பாக ஆடி மூன்றாவது கால் பகுதியில் 31 பாயிண்ட் எடுத்தனர். லேக்கர்ஸின் பாயிண்ட் 15.

மிக பரபரப்பாக ஆரம்பித்து நான்காவது(கடைசி) கால் பகுதி. லேக்கர்ஸின் டீமின் நட்ச்சத்திரம் கோபி பிரையன்ட் எவ்வளவே முயற்சித்தும் கடைசி நொடி வரை சிறப்பாக பிக் 3 மட்டுமல்லாது ஜேம்ஸ் போஸி சேர்ந்து ஆடி பாஸ்டன் செலிடிக்ஸ்க்கு வெற்றியை தேடித்தந்தனர்.ஆட்ட இறுதியின் பாயிண்ட் செலிடிக்ஸ் 97 - லேக்கர்ஸ் 91. என்ன ஒரு சூப்பர்ப் மேட்ச்.

இன்னும் ஒரு மேட்ச்சில் வென்றால் பாஸ்டன் இந்த வருட சாம்பியன்ஷ்ப் கப். அந்த நாள் வரும் 5 ஆட்டம் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமையிலா? அல்லது 6வது ஆட்டம் நடைபெறும் செவ்வாய்க்கிழமையிலா? பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்...

0 Comments:

Post a Comment

<< Home