tholaiththavan

Sunday, September 28, 2008

அம்மா ஊருக்கு போயிட்டாங்க...

அம்மாவோட அமெரிக்க பயணம் முடியிற நாளு (செப்டம்பர் 27) நெருங்குறதால கடந்த ரெண்டு வாரமாவே வீடு பரபரப்பா இருந்துச்சி. என்னோட பிரண்ட்ஸ்ம் தொடர்ந்து அவங்க வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டாங்க... இதுக்கு நடுவுல ஊருக்கு போறதுக்கு தேவையான சாமான்களை கிடைச்ச நேரத்துல வாங்க ஆரம்பிச்சோம்.



நானும் ஆபிஸ் வேலையில பிஸியா இருந்ததால, அம்மாவே இனிசியல் பேக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. போன வியாழக்கிழமை ஓரளவு பேக்கிங்கை முடிச்சிட்டு வெயிட் போட்டு பார்த்தோம். ரெண்டு பெட்டியும் 45 எல்பி இருந்துச்சி. இன்னும் சாக்லேட், சின்ன சின்ன ஷாப்பிங் பண்ணி சரியா இருக்கும்ன்ணு பெட்டியா எடுத்து வச்சிட்டோம்.

வெள்ளிக்கிழமை மதியம் ஆபிஸ்க்கு லீவை போட்டு அம்மாவை சாம்ஸ்கிளப், வால்மார்ட்க்கு கூப்பிட்டு போயி கடைசி நேர ஷாப்பிங்கை முடிச்சோம்.


சனிக்கிழமை காலை எழுந்தவுடனே அம்மா இது நாள் வரை இங்க சுத்தி பார்த்தப்ப எடுத்த போட்டேசை பிரிண்ட் போட சாம்ஸ்கிளப்ல குடுத்துட்டு ஆபீஸ்க்கு போனேன். "அம்மா மதியம் ஊருக்கு போறாங்க, நீ இங்க என்னாடா பண்ணுறன்ணு" பிரண்ட்ஸ்க கேட்டாங்க. கொஞ்ச நேரம்தாம்ப்பான்னு சொல்லி, 12 மணி ஆபீஸ் வேலைய முடிச்சிட்டு என்னோட போர்டிங் பாஸை பிரிண்ட் அவுட் எடுத்துட்டு, போட்டோசை வாங்கிட்டு வர மணி 12.45 ஆச்சி. நான் அம்மா, மத்தவங்களையும் அனுப்பிவிடுறத்துக்கு கூஸ்டன் வரைக்கும் போறேங்க.


கடைசி நேரத்துல அம்மாவுக்கு பிரண்ட்ஸ் குடுத்த கிப்டு எல்லாத்தையும் பெட்டியில போட்டு, வேக, வேகமா அம்மா வச்ச மீன் குழம்பைச்சாப்பிட்டுட்டு ஏர்ப்போர்ட்டுக்கு கிளம்ப மணி 1:45 ஆயிடுச்சி. பாரதி அம்மாவும், சுப்ராவோட அம்மா, அப்பவும் ஏற்கனவே ஏர்ப்போர்ட்டுக்கு வந்துட்டாங்க. பேக்கேஜ் செக்கிங்கை முடிக்கும் போது பிரண்ட்ஸ் எல்லாம அம்மாவை வழியனுப்ப வர்றதுக்கும் சரியா இருந்துச்சி.



கேட்டுக்கு போறதுக்கு முன்னாடி எல்லாரும் ஜாலியா பேசிக்கிட்டு இருந்தோம். இப்ப சுவாமி எங்க எல்லாதையும் போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தான். மணி 2.45 ஆனதும், எல்லாத்துக்கும் பை சொல்லிட்டு பிளைட் கேட்டுக்கு போனேம். கொஞ்ச நேரத்துல பிளைட்ல போர்ட் ஆனோம். 1:30 மணி நேரத்துல கூஸ்டன்க்கு வந்து சேர்ந்தோம். B டெர்மினல்ல இருந்து D டெர்மினல்ல மாறி துபாய்ப்போற பிளைட் கேட்டுக்கு வந்தோம். நல்ல வேளையா தெலுங்க்கும், தமிலும் பேசுர ஜான்சன்ங்கிறவரு இருந்தாரு. சுப்ரா அப்பா, அம்மாவுக்கு ரெம்ப வசதியா போச்சி. பக்கதுல சென்னை வரைக்கும் போற ஒரு அம்மா இருந்தாங்க. அவங்க ரெண்டு பேருக்கிட்டேயும் இவங்களுக்கு இங்கிலீஸ் தெரியாது, இமிகிரேசன், துபாயில இருந்து சென்னைக்கு போற பிளைட் மாறுறதுக்கு உதவி பண்ணுங்கன்னு கேட்டேன். "அவங்க நீங்க கவலைப்படாதீங்க,நாங்க பார்த்துகுறோம்ண்ணு" சொன்னாங்க.

பிளைட்க்கு பைனல் கால் பண்ணம் போது எல்லாரும் பிளைட்டு உள்ள போக லையன்ல நிக்க ஆரம்பிச்சாங்க, அம்மா கண்ணுல கண்ணீர் வர ஆரம்பிச்சிடுச்சி. என்னையும் அறியாம என் கண் கலங்க ஆரம்பிச்சிடுச்சி. ஆனா நம்ம தான் சமாளிப்போமே, சரிம்மா பாத்து,ஜாக்கிரதையா போயிட்டு வாங்கன்னு சொல்லி அவங்க உள்ள போற வரைக்கும் டாட்டா காமிச்சேன்.



பிளைட்டு கேட்டு வாசல்ல நான் ஒருத்தன் மட்டும் தனியா நின்னு அவங்க என் கண்ண விட்டு போற வரைக்கும் நின்னு பார்த்துட்டு, நான் ரிட்டன் வர்ற கூஸ்டன் டூ டாலஸ் பிளைட் கேட்டுக்கு வந்தேன். பிரண்ட்ஸ்க்கு எல்லாத்துக்கும் போன் பண்ணி, "அம்மா நல்ல படியா ஊருக்கு கிளம்பிட்டங்க"ன்னு சொல்ல ஆரம்பிச்சேன்.

என்னோட பிளைட்டுக்கு போர்டிங்க்கு கூப்பிடாங்க. 1:00 மணி நேர டிராவலுக்கு பிறகு டாலஸ் வந்தேன். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் சாமி என்னை பேமிலியோட பிக்கப் பண்ண வந்தான். அவங்க வீட்டுக்கு போயிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். சூப், புலாவ், அப்பளம்ன்னு கலக்கலான டின்னரை முடிச்சிட்டு தூங்கினோம். காலைல 6:15க்கு என்னை சாமி எழுப்பி விட்டான். குளிச்சிட்டு சுட சுட 5 இட்லியை சப்பிட்டுட்டு வேகமா ஏர்போட்டுக்கு போனோம்.

பிளைட்டுல நல்ல தூக்கம். லிட்டில் ராக் வரும் போது 9:30 மணி ஆனது.

ஏர்போர்ட்ட்ல இருந்து நேரா ஆபீஸ்க்கு போனேன்.அடுத்த வாரம் எங்க ப்ரொஜெட் புரடக்சன். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை எல்லா நாளும் ஆபீஸ் தான். சாயங்காலம் 5:30 வரைக்கும் ஆபீஸ்ல இருந்துட்டு வீட்டுக்கு கிளம்பும் போது மணி மாமாவிற்க்கு போன் செய்து "அம்மா வந்தாச்சா" கேட்டேன். இப்பதான்டா இமிக்ரேசன் கிளியர் பண்ணுராங்க, முடிச்சிட்டு கால் பண்ணுரேன்னு சொன்னார். சரின்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்தேன். கொஞ்ச நேரத்துல மாமா போன் செஞ்சி அம்மாக்கிட்ட குடுத்தார். "நல்ல படியா ஊருக்கு வந்து சேர்ந்துடேன்டா கண்ணு" என்று அம்மா சொன்னாங்க. எனக்கு சந்தோசம்.

டிராவலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஜான்சன் மற்றும் பெயர் தெரியாத அம்மாவோட உதவியினால் நல்லப்படியாக சென்னைக்கு வந்து சேர்ந்துட்டாங்க.

அம்மாவோட ஹெண்ட் பேக்கேஜ் மட்டும் வரல. அதுக்கு ஏர்போர்ட்ல எழுதி குடுத்துட்டு கிளம்பி வீட்டுக்கு போயிக்கிட்டு இருக்காங்க.

நம்ம எவ்வளவு தான் பெரியவங்களானாலும் அவங்களுக்கு நாம குழந்தைதான்னு, கடந்த 5 மாசமா சின்ன விசயங்களைக்கூட பாத்து பாத்து பண்ணின அம்மா இப்ப ஊருக்கு போயிட்டாங்க.

அம்மா அமெரிக்கா வந்ததுக்கு அப்புறம் லிட்டில் ராக்குல இருக்கிற பேமிலி மக்கள், பிரண்ட்ஸ்ம் சரி, வெளியே சுத்தி பார்க்க போன ஊர்ல இருக்கிற பிரண்ட்ஸ்ம் சரி, அவங்க அம்மா வந்தா எப்படி கவனிப்பாங்கலோ அதே மாதிரி என் அம்மாவை நல்ல கவனிச்சாங்க. அம்மா இவ்வளவு நாள் இங்க சந்தோசமா இருந்த்துக்கு முக்கிய காரணம் அவங்களும் தான். அவங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியல.

கடந்த 7 வருசத்துக்கு அப்புறம் இப்ப தான் 5 மாசம் 8 நாள் என்னோட அம்மா தங்கி இருந்தாங்க. அம்மா இங்க என்னோட தங்கி இருந்த இந்த நாட்கள் என் வாழ்வில் மறுக்க முடியாத, மறக்க முடியாத பொன் நாட்கள்.

2 Comments:

Post a Comment

<< Home